நாலுவேதபதி அமரபதீசுவரர் கோயில்
நாலுவேதபதி அமரபதீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் வேதாரண்யம்-நாகப்பட்டினம் சாலையில் கொடிசுத்திப் பாலத்திற்குக் கீழ்ப்பாகத்தில் 1 கிமீ தொலைவில் உள்ளது.[1]
இறைவன், இறைவி
தொகுஇங்குள்ள மூலவர் அமரபதீசுவரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி.[1]
சிறப்பு
தொகுஅமரர் மற்றும் பதி இணைந்து அமராபதி ஆகியுள்ளது. ரிக், யஜுர், சாம, அதர்வணம் எனப்படுகின்ற நான்கு வேதங்களும் பூசித்ததால் சதுர்வேதமங்கலம் என்றும் நாலுவேதபதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரன் நான்கு வேதங்களால் பூசித்ததால் மூலவர் அமராபதீசுவரர் என்றழைக்கப்படுகிறார்.[1]