நாகன்

(நாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாலை கிழவன் நாகன் - நாலை என்பது பாண்டியநாட்டு ஊர். இந்த ஊரில் சீரும் சிறப்புமாக வாழ்ந்தவன் நாகன்.

இவன் உழவர் பெருமகன் என்பது இவனுக்குத் தரப்பட்டுள்ள ‘நாலை கிழவன்’ என்னும் அடைமொழியால் தெரியவருகிறது.

இவன் போர்க்காலத்தில் வாள்வீரனாக அரசனுக்கு உதவினான். அத்துடன் அவ்வப்போது அரசனுக்கு அறிவுரை வழங்கும் அமைச்சனாகவும் திகழ்ந்தான்.

இவனது அரசன் ‘நுண்பூண் பாண்டியன்’. [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. மண்பல தந்த திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன் படை வேண்டுவழி வாள் உதவியும், வினை வேண்டுவழி அறிவு உதவியும் – தோலா நல்லிசை நாலை கிழவன் – திருந்துவேல் நாகன் - வடநெடுந்தத்தனார் என்னும் புலவர் இவனது சிறப்புக்களைப் பாடியுள்ளார். புறம் 179
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகன்&oldid=873775" இலிருந்து மீள்விக்கப்பட்டது