நாளக் கட்டி
நாளக் கட்டி (Angioma) என்பது குருதிக் குழாய் அல்லது ஊநீர் குழாய்களின் சுவர்களில் தோன்றும் தீங்கற்றக் கட்டியாகும். இரத்தநாளம் அல்லது நிணநீர் நாளச் சுவர்களில் (நாளங்களின் உட்சவ்வுகளில்) உள்ளச் செல்கள் அல்லது இத்தகு நாளங்களைச் சுற்றியுள்ளத் திசுக்களிலிருந்துப் பெறப்பட்டச் செல்களிலிருந்து இக்கட்டிகள் உருவாகின்றன[1][2]. இக்குழாய்களின் உயிரணுக்கள் பல்கிப் பெருகி வளருவதால் இக்கட்டித் தோன்றுகிறது. வயது ஆக ஆக இந்நோய் தோன்றும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இது புற்றுநோய் அல்ல. வயதானவர்களிடம் இந்நோய் ஈரலிலும் தோன்ற வாய்ப்புள்ளது. இக்கட்டிகள் பின்நாளில் நுரையீரலில் தோன்றக்கூடும். இந்நோய் பொதுவாக உடலின் புறப்பரப்பில் தோல்பகுதியில் தோன்றுகின்றது. தோன்றும் இடத்தைப் பொறுத்து நோயின் வீரியமும் துன்பமும் அமையும். ஆனாலும் ஈரல் சுருக்க நோயின் விளைவாகவும் இது இருக்க வாய்ப்புண்டு. நல்ல தோற்றத்திற்காக இந்த கட்டிகள் அறுவை மூலம் அகற்றப்படுகின்றன.
குருதிக்குழாய் புற்றுநோய்
தொகுகுருதிக்குழாய் புற்றுநோய் (Angiosarcoma) என்பது குருதிக்குழாய் மற்றும் ஊநீர் குழாயில் தோன்றும் ஊறுவிளைவிக்கும் கட்டிகளைக் குறிக்கும். இதற்கு, மருத்துவரை அணுகி மருத்துவம் பெற்றால் நலம் பெறலாம்.