நா. இளங்கோ
நா. இளங்கோ (N. Ilango, பிறப்பு: ஏப்ரல் 29, 1959) என்பவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் புதுச்சேரி அரசின் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
முனைவர் நா. இளங்கோ | |
---|---|
பிறப்பு | நா. இளங்கோ ஏப்ரல் 29, 1959 புதுச்சேரி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | மலையருவி |
கல்வி | தமிழ் முதுகலைப் பட்டம் தமிழ் இலக்கியத் துறையில் முனைவர் பட்டம் |
பணி | தமிழ்ப் பேராசிரியர் |
பெற்றோர் | ப.நாகமுத்து வர்ணமுத்து |
கல்வி
தொகுபுதுச்சேரி அரசின் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்புகளை மேற்கொண்ட இளங்கோ தென்னாற்காடு மாவட்டம் மயிலம், சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் படிப்பிற்கு இணையான இளம் இலக்கியம் (பி. லிட்) பட்டம் 1979 இல் பெற்றார். பின்னர் 1981 ஆம் ஆண்டில் புதுச்சேரி, தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் முதுகலைப் பட்டமும், 1982 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 1987 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பொறுப்புகள்
தொகு- புதுச்சேரி மாநிலக் கலை இலக்கிய மன்றப் பொதுச் செயலாளராக இருந்தவர்.
- தமிழ்க் கவிதை உலகில் “மலையருவி” என்ற பெயரால் அறியப்படும் கவிஞர்.
- புதுச்சேரி சமூக நீதிப் பேரவையின் நிறுவனர்களில் ஒருவர்.
ஆய்வுகள்
தொகு- “முதற்குறள் ஆய்வு” எனும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வு.
- “நாட்டுப்புற வாழ்வியலில் மலடியர் பற்றிய மதிப்பீடுகளும் குழந்தைபேறு தொடர்பான நம்பிக்கைகளும் வழக்காறுகளும்” என்ற தலைப்பில் ஆய்வேடு சமர்பித்து நாட்டுப்புறவியல் பட்டயம். (நாட்டுப்புறவியல் பட்டயத்திற்காக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட முதல் ஆய்வேடு இதுவாகும்)
- “நாட்டுப்பறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும்” எனும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு.
எழுதியுள்ள நூல்கள்
தொகு- காலடியில் தலை (புதுக் கவிதை)
- மலடியும் மழலையும் (நாட்டுப்புறவியல் ஆய்வு)
- நாட்டுப்புறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபுகளும் (நாட்டுப்புறவியல் ஆய்வு)
- மொழிபெயர்ப்பும் மொழிப் பயிற்சியும் (மொழித்திறன்)
- இணர் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு (தொகுப்பாசிரியர்)
- தமிழ் இணர் (இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்)
- படர்க்கை (தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள்)
- பொருநராற்றுப்படை மூலமும் உரையும்
- மலர் நீட்டம் (செம்மொழி இலக்கிய ஆய்வுகள்)
- ஊடகங்களின் ஊடாக (ஊடகவியல் கட்டுரைகள்)
வெளி இணைப்புகள்
தொகுஆதாரம்
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
- முனைவர் நா.இளங்கோ-http://www.tamilauthors.com/writers/india/N.Ilango.html