நிகழ்காலம்

நிகழ்காலம் (Present tense) என்பது ஒரு காலம் ஆகும், இதன் முக்கியச் செயல்பாடு தற்போதைய நேரத்தில் ஒரு சூழ்நிலை அல்லது நிகழ்வைக் கண்டுபிடிப்பதாகும்.[1] தற்போது நிகழும் செயல்களுக்கு நிகழ்காலம் பயன்படுத்தப்படுகிறது. நிகழ்காலம் நான்கு வகைப்படும். அவையாவன,

  1. சாதாரண நிகழ்காலம்: இது வழக்கமாக நிகழும் ஒரு செயல் அல்லது நிகழ்வைக் குறிக்க ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தப்படுகிறது.குறிக்கப்பட்ட கால அட்டவணை அல்லது ஏற்கனவே திட்டமிடப்பட்ட எதிர்கால நிகழ்வுகளைக் குறிக்க சாதாரண நிகழ்காலம் பயன்படுகிறது. எ.கா: அடுத்த வானூர்தி நாளை காலை 7 மணிக்குப் புறப்படும். [2]
  2. நிகழ்கால வினைமுற்று: கடந்த காலத்தில் தொடங்கிய நிகழ்வு அண்மையில் நிறைவு பெற்றாலோ குறிப்பிட்ட காலத்தை உணர்த்தாத இறந்தகால நிகழ்வைக் குறிக்கவோ கடந்த காலத்தில் தொடங்கிய நிகழ்வானது நாம் பேசும் போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் எனில் இக்காலம் பயன்படுத்தப்படுகிறது.[3]
  3. தொடர் நிகழ்காலம்: தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு செயலை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது.
  4. முற்றுப் பெற்ற தொடர் நிகழ்காலம்: கடந்த காலத்தில் தொடங்கிய நிகழ்வானது தற்போது வரை தொடரும் போது இந்தக் காலம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Comrie, Bernard (1985). Tense. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-23652-5.
  2. சாதாரண நிகழ்காலம் விளக்கம் (2nd ed.). S.CHAND & PUBLICATIONS PVT LTD. 2014. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-219-2977-6.
  3. Chalker, Sylvia; Weiner, Edmund; Weiner, Edmund S. C. (1998). The Oxford dictionary of English grammar. Oxford paperback reference (Reissued, with corr., in new covers ed.). Oxford: Oxford Univ. Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280087-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்காலம்&oldid=4170610" இலிருந்து மீள்விக்கப்பட்டது