நிகொலாய் திமீத்ரியேவிச் மாயிசெயேவ்
நிகொலாய் திமீத்ரியேவிச் மாயிசெயேவ் (Nikolay Dmitriyevich Moiseyev) (உருசியம்: Никола́й Дми́триевич Моисе́ев; திசம்பர், 3(16), 1902, பெர்ம் - திசம்பர் - 6, 1955 மாஸ்கோ) உருசிய சோவியத் வானியலாளர் ஆவார். இவர் வான்கோள இயக்கவியலில் வல்லுனர் ஆவார். இவர் 1938 இல் மாஸ்கோ அரசு பல்கலைக்கழக வான்கோள இயக்கவியல் துறையின் தலைவர் ஆனார். அங்கு அட்தே பதவியில் தன் இறப்பு வரை தொடர்ந்தார்.இவரின் முதன்மையான பணிகள் வான்கோளம் சார்ந்த கணக்கீடுகளுக்குக் கணிதவியல் படிமங்களை உருவாக்குதலும் வால்வெள்ளி உருவாக்கம் சார்ந்த கோட்பாட்டை உருவாக்குதலும் ஆகும்.
இவர் சுக்கோவ்சுகி படைசார் கல்விக்கழகத்தில் வான்படையின் பொறியியல் கலோனலாக, உயர்கணிதவியலைப் பயிற்றுவித்தார. இவர் 1839 முதல் 1943 வரை சுடெர்ன்பர்கு அரசு வானியல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்துள்ளார். அப்போது நேரத்தைத் துல்லியமாக்க் கணிக்கும் வானொலிக் குறிகைகளின் தேசிய அமைப்பை ஒருங்கிணைத்தார்.
ஓர் இலெனின் ஆணையும் ஒரு மாபெரும்நாட்டுப்பற்றுப் போர் ஆணையும் இரண்டு சிவப்பு விண்மீன்களும் இவர் பெற்ற விருதுகள் ஆகும்.
நிலாவின் மாயிசெயேவ் குழிப்பள்ளமும் சோவியத் வானியலாளர் பெலகேயா சாய்ன் 1935 இல் கண்டுபிடித்த 3080 மாயிசெயேவ் சிறுகோளும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.
வெளி இணைப்புகள்
தொகு- (உருசிய மொழியில்) Biography of Nikolay Moiseyev