நிக்கல்-இரும்பு சேமக்கலம்

நிக்கல்-இரும்பு மின்கலம் (nickel–iron battery) என்பது நிக்கல் (III) ஆக்சைடு-ஐதராக்சைடு நேர்மறை தகடுகள் மற்றும் இரும்பு எதிர்மறை தகடுகள் மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடு மின்பகுபொருள் ஆகியவற்றைக் கொண்ட மறு ஊட்டம் செய்யக்கூடிய மின்கலம் ஆகும். இது மிகவும் வலுவான பேட்டரி ஆகும். [1] சேமக்கலத்தை பிளான்டே (Plante) என்பவர் முதன்முதலில் கண்டுபிடித்தார். இக்கலத்தில் முதலில் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கரைசலை வைத்து நிக்கல் ஹைடிரேட்டு தகடையும், இரும்பு ஆக்சைடு தகடையும் அதில் அமிழ்த்தி வெளியிலிருந்து மின்னேற்றம் செய்வார்கள்.[2] அமிழ்த்தப்பட்ட தகடுகள் முறையே நிக்கல்-டை-ஆக்சைடாகவும், இரும்பாகவும் மாறுகின்றன. இப்பொழுது இது ஒரு சேமக்கலம். தன் மின்னழுத்தம் 1.4 வோல்ட். சேமக்கலத்திலிருந்து ஓரளவு மின் சக்தியையே பெறலாம். குறிப்பிட்டளவு மின்சக்தி வெளி வந்தபிறகு மறுபடியும் வெளியிலிருந்து மின்னேற்றம் செய்து மின்சக்தியை இக்கலங்களில் சேமிக்கவேண்டும்.

நிக்கல்-இரும்பு சேமக்கலம்

மேற்கோள்கள்தொகு

  1. David Linden, Thomas B. Reddy (ed). Handbook Of Batteries 3rd Edition, McGraw-Hill, New York, 2002 ISBN 0-07-135978-8, Chapter 25
  2. http://www.nickel-iron-battery.com/