நிக்கல்-இலித்தியம் மின்கலம்
நிக்கல்-இலித்தியம் மின்கலம் (Nickel–lithium battery) பரிசோதனையிலுள்ள ஒரு மின்கலமாகும். சுருக்கமாக இதை Ni–Li மின்கலம் என்பர். நிக்கல் ஐதராக்சைடு எதிர்மின்வாயாகவும் இலித்தியம் நேர்மின்வாயாகவும் இம்மின்கலத்தில் பயன்படுத்தப்படுகிறது. சாதரணமாக இந்த இரண்டு உலோகங்களும் ஒரு மின்கலத்தில் பொதுவாக ஒன்றாகப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் இரண்டிற்கும் இணக்கமான மின்பகுளிகள் இல்லை. இலித்தியம் சிறப்பயனி கடத்தி வடிவமைப்பு ஒவ்வொரு உலோகத்துடனும் தொடர்பிலுள்ள இரண்டு மின்பகுளிகளையும் பிரிக்க புரைம கண்ணாடி அடுக்கைப் பயன்படுத்துகிறது. இம்மின்கலம் இலித்தியம் அயனி மின்கலத்தை விட ஒரு பவுண்டுக்கு மூன்றரை மடங்கு அதிக ஆற்றலை வைத்திருக்கும் என்றும், பாதுகாப்பாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிக்கல்-இலித்தியம் மின்கலம் உற்பத்திக்கான சிக்கல்களும் நீடித்த உழைப்புக்கான சிக்கல்களும் இன்னும் தீர்க்கப்படவில்லை. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ New Nickel–Lithium Battery Has “Ultrahigh” Energy Storage Capacity, gas2.org, October 6, 2009