நிக்குரோமைட்டு
நிக்குரோமைட்டு (Nichromite) என்பது (Ni,Co,Fe)(Cr,Fe,Al)2O4 [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். கருப்பு நிறத்துடன் கனசதுரச் சீரொழுங்கில் உள்ள இக்கனிமம் சிபைனைல் குழுக் கனிமங்களில் ஓர் உறுப்பினராகும் [5].தென் ஆப்பிரிக்காவின் [1] பார்பெர்டோன் மாவட்டத்திலுள்ள பகுதியான பான் அக்கார்டு நிக்கல் படிவுகளில் நிக்குரோமைட்டு கண்டறியப்பட்டது. இயற்கையில் நிக்கல் படிவுகளில் நிக்குரோமைட்டு தோன்றுகிறது. நிக்கல் மிகுதியான குரோமைட்டு கனிமம் என்பதால் இப்பெயர் சூட்டப்பட்டது [2].
நிக்குரோமைட்டு Nichromite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சிபைனல் குழு |
வேதி வாய்பாடு | (Ni,Co,Fe)(Cr,Fe,Al)2O4 |
இனங்காணல் | |
நிறம் | அடர் பச்சை, கருப்பு |
படிக இயல்பு | மணிகள், வடிவற்றது முதல் பகுதி வடிவமுள்ளது வரை. |
படிக அமைப்பு | கனசதுரப் படிகம் |
முறிவு | சங்குருவம் |
மோவின் அளவுகோல் வலிமை | 6-6 1⁄2 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | சாம்பல் பச்சை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 5.10 |
ஒளியியல் பண்புகள் | சமவச்சு |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
சிபைனல் குழுவின் அணு அமைப்பு முறை பொதுவாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பாகும், மேலும் பண்பு ரீதியாக சொல்வதென்றால் இக்கட்டமைப்பில் நான்கு நெருக்கப் பொதிவு ஆக்சிசன் அணுக்கள் உள்ளன. நிக்கல் அணுக்கள் சாதாரண சிபைனல் முறைக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன [6].
இந்த கனிமம் தென்னாப்பிரிக்காவில் உள்ள பான் அக்கார்டு நிக்கல் படிவுகளில் மட்டுமே காணப்படுகிறது, அங்கு இது குரோமைட்டை இடப்பெயர்ச்சி செய்து மாற்றுவதன் மூலம் இது உருவாகிறது. விளிம்புகளில் டிரெவோரைட்டு கனிமம் படிந்துள்ளது [4].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Nichromite on Mindat.org
- ↑ 2.0 2.1 Nichromite on Webmineral
- ↑ Sawaokaa,A.,Saitoa,S.,Inoueb,K. and Asadab,T. (1971)Effect of high pressure on the lattice constants of chromites having the spinel structure. Materials Research Bulletin, 6, 97-101.
- ↑ 4.0 4.1 Cabri, L. J., Chao G.Y., Pabst, Adolf, Fleischer, Michael. (1980) New Mineral Names. American Mineralogist, 65, 811.
- ↑ "Glossary of Geology". Archived from the original on 2019-03-06. பார்க்கப்பட்ட நாள் 2019-10-01.
- ↑ Wyckoff, R.W.G. (1965) Crystal Structures (Second Edition). 75-86 p. University of Arizona, Tucson, Arizona.