நிக்கோலாய் தெமியானோவ்
உருசிய வேதியியலாளர்
நிக்கோலாய் யாகோவ்லெவிச் தெமியானோவ் (Nikolay Yakovlevich Demyanov; உருசியம்: Никола́й Я́ковлевич Демья́нов; மார்ச் 27 [யூ.நா. மார்ச் 15] 1861, திவேர் – மார்ச் 19, 1938, மாஸ்கோ), உருசியாவைச் சேர்ந்த ஒரு கரிம வேதியியலாளர் ஆவார். தெம்யானோவ் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார்.[1] உருசிய அறிவியல் கல்விக்கழகத்தில் தெமியானோவ் ஒர் உறுப்பினராக இருந்தார். தெம்யானோவ் மறுசீரமைப்பு வினை என்ற கரிம வேதியியல் வினைக்காகவும் வேறு சில கண்டுபிடிப்புகளுக்காகவும் இவர் நன்கு அறியப்படுகிறார்.
நிக்கோலாய் யாகோவ்லெவிச் தெமியானோவ் Nikolay Yakovlevich Demyanov | |
---|---|
பிறப்பு | மார்ச் 27 [யூ.நா. மார்ச் 15] 1861 திவேர் |
இறப்பு | மார்ச்சு 19, 1938 மாஸ்கோ | (அகவை 77)
வாழிடம் | உருசியப் பேரரசு சோவியத் ஒன்றியம் |
துறை | கரிம வேதியியல் |
கல்வி | அறிவியல் முனைவர் (1899) உருசிய அறிவியல் கல்விக் கழகத்தின் கல்வியாளர் |
கல்வி கற்ற இடங்கள் | மாஸ்கோ பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | எத்திலீன் தொடரின் ஐதரோகார்பன்களில் நைத்திரிக் நீரிலியும் நைதர்சன் ஆக்சைடும் |
ஆய்வு நெறியாளர் | விளாதிமிர் மார்கோவ்னிக்கோவ் |
அறியப்படுவது | தெமியானோவ் மறுசீராக்கல் வினை |
விருதுகள் | லெனின் பரிசு (1930) |
1930 ஆம் ஆண்டு இவருக்கு லெனின் பரிசு வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Academician Nikolay Yakovlevich Demyanov - உருசிய மொழியில்