நிக்சன் தலைகீழ் வழு
நிக்சன் தலைகீழ் வழு என்பது, 1995ல் ஐக்கிய அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட ரிச்சார்ட் நிக்சன் நினைவு அஞ்சல்தலையின் பெயர்பெற்ற தலைகீழ் வழு ஆகும். சனவரி 1996ல் முதன் முதலாகத் தெரியவந்த இந்த வழு, அந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு கவனத்தை ஈர்த்திருந்தது. ஆனால், டிசம்பரில், பிழையாக அச்சான அஞ்சல்தலைத் தாளைத் திருடினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அது அச்சிட்ட அச்சகத்தின் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால், அந்தத் தலைகீழ் வழு முறையானது அல்ல, வெறும் அச்சகக் கழிவே என்றானது.[1][2][3]
நிக்சன் தலைகீழ் வழு | |
---|---|
நான்கு அஞ்சல்தலைகள் விளிம்புப் பகுதியும், தலைகீழான படம் இரண்டு அஞ்சல்தகைகளுக்கு இடையில் காணப்படுவதையும் காட்டுகிறது. | |
உற்பத்தியான நாடு | ஐக்கிய அமெரிக்கா |
எப்படி அருமை | தலைகீழ் வழு |
முகப் பெறுமானம் | 32 சென்டுகள் |
மதிப்பீடு | ஐ. அ. $$8,000-$10,000 |
பெப்ரவரி முதலாம் தேதி, கிறிஸ்டீஸ் எனப்படும் கலைப்பொருள் ஏல நிறுவனம், இதை ஏலத்துக்கு விடுவதாக அறிவித்த போதே இந்தத் தலைகீழ் வழு பொதுமக்கள் கவனத்துக்கு வந்தது. அதன் பெறுமதி 8,000 - 10,000 ஐக்கிய அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதை யார் கொடுத்தது என்பது வழமையான நடைமுறைகளுக்கு இணங்க வெளியிடப்படவில்லை. ஆனால், அது 160 அவ்வாறான அஞ்சல்தலைகளுள் ஒன்று என அறிவித்திருந்தனர்.
தபால்தலையில் நிக்சனின் படம் தலைகீழாக இருப்பதுடன் இருக்கவேண்டிய இடத்திலிருந்து விலகியும் காணப்படுகிறது. இதனால் படம் துளைவரிசையினால் இரண்டாகப் பிரிந்து காணப்படுகிறது. படத்துக்குக் கீழேயுள்ள "USA / 32" என்னும் எழுத்துக்களும் தலைகீழாகவே காணப்படுகின்றன. ரிச்சாட்சார்ட் நிக்சன் என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயர் மட்டும் நேராக உள்ளது. அஞ்சல்தலைகள் இரண்டு படிகளில் அச்சிடப்பட்டதால் இது ஏற்பட்டது. முதலில், படமும், பெறுமானமும் ஈடில்பேர்க் ஆறு நிற தாள் செலுத்தும் அச்சியந்திரத்தில் அச்சிடப்பட்டது. பின்னர் அங்கிருந்து நியூயார்க்கின் சஃபர்ன் என்னும் இடத்திலுள்ள "பாங்க் நோட் கார்ப்பொரேசன் ஆஃப் அமெரிக்கா" நிறுவனத்துக்கு அனுப்பி அங்கே பெயர் அச்சிடப்பட்டதுடன், துளைகளும் இடப்பட்டன.
சான்றுகள்
தொகு- ↑ "United States of America, Appellee, v. Clarence Robert Robie, Defendant-appellant, 166 F.3d 444 (2d Cir. 1999)". Justia Law (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-22.
- ↑ "Alphabetilately: I is for Invert Error". alphabetilately.org. பார்க்கப்பட்ட நாள் 2024-02-22.
- ↑ "What is printer's waste?". Linns Stamp News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-22.
- Michael Baadke, "Nixon invert found near Washington, D.C.; Christie's will auction single stamp Feb. 1", Linn's Stamp News, January 29, 1996
- Michael Baadke, "Printing plant employee stole Nixon inverts, U.S. attorney alleges; N.Y. resident arrested", Linn's Stamp News, December 30, 1996
- Michael Baadke, "Robie trial answers some questions, not all", Linn's Stamp News, June 16, 1997