நிக் வாலென்டே
நிக் வாலென்டே (Nik Wallenda) (பிறப்பு:சனவரி 24, 1979) அமெரிக்காவிலுள்ள மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கின் உயரே இழுத்துக்கட்டிய 5 செ.மீ. தடிமன் கொண்ட உருக்குக் கயிற்றின் மீது 427 மீட்டர் தூரம் நடந்து மறுபக்கம் சென்றடைந்த சாதனையாளர் ஆவார்.
நிக் வாலென்டே | |
---|---|
2014 நவம்பர் 2 அன்று வாலென்டா | |
பிறப்பு | நிகோலசு வாலென்டா சனவரி 24, 1979 சரசோட்டா, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | The King of the Wire (nickname)[1] |
பணி | உடல் வளைத்து வித்தைகள் செய்பவர், உயரக் கம்பிக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–தற்போது வரை |
அறியப்படுவது | 2020 மார்ச் 4 ஆம் நாள் நிக்கராகுவாவில் மசாயா எரிமலையின் உயரே 1800 அடி தொலைவை கம்பியின் மேல் 31 நிமிடங்கள் 23 நொடிகளில் கடந்தமைக்காக புகழ் பெற்றவர் வலையற்று உயரக்கம்பியின் மீது நடந்தவர் நயகரா நீர்வீழ்ச்சியின் மீது இறுகக்கட்டப்பட்ட எஃகுக் கம்பியின் மீது நடந்தவர் |
பெற்றோர் | டெலிலா வாலென்டா மற்றும் டெர்ரி டிரோபெர் |
வாழ்க்கைத் துணை | எரென்டிரா வாஸ்குவெசு (தி. 1999) |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | கார்ல் வாலென்டா (பாட்டன்) |
விருதுகள் | ஒன்பது முறை உலக சாதனையாளர்[2] |
வலைத்தளம் | |
nikwallenda |
வரலாற்றுச் சாதனை
தொகுஇயற்கை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்கின் குறுக்கே நடந்த முதல் மனிதன் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தவர் நிக் வாலென்டே. இந்தச் சாதனையின்போது இவர் பாதுகாப்பு வலையோ கயிற்றால் உடலைப் பிணைக்கவோ செய்யவில்லை. சமன் செய்வதற்காக கையில் 20 கிலோ எடையுள்ள ஒரு கம்பு மட்டுமே கையில் வைத்திருந்தார். நிக் வாலென்டே 22 நிமிடம் 54 வினாடிகளில் இந்த 427 மீட்டர் தூரத்தைக் கடந்தார்.[3]
முந்தைய சாதனை
தொகுநிக் வாலென்டே 2012ஆம் ஆண்டு நயாகரா நீர்வீழ்ச்சியின் இரண்டு புறமும் இதே போல உருக்குக் கயிற்றைக் கட்டி கடந்து சென்றார்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Wallenda slides but rides in record stunt - TODAY People - TODAY.com". web.archive.org. 2012-02-14. Archived from the original on 2012-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
- ↑ "HuffPost - Breaking News, U.S. and World News". HuffPost (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
- ↑ "Daredevil Wallenda to take on Grand Canyon – without a safety net". Christian Science Monitor. 2013-06-23. பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.