நிசாம் சித்திக்
சாகித்திய அகாதமி விருது பெற்ற உருது எழுத்தாளர்
நிசாம் சித்திக், இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் உருது மொழியில் கட்டுரைகளை எழுதுபவர். இவர் கான்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் முதுகலையும் பயின்றவர். இவர் எழுதிய மபத்-இ-ஜாதிதியத் செ நயே ஆஹெத் கி தக்லிகியத் தக் என்ற நூலுக்கு, இந்திய சாகித்திய அகாதமி 2016ஆம் ஆண்டில் விருது வழங்கியது. இதைத் தவிர ஏழு கதைத்தொடர்களையும், இரண்டு விமர்சனப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் அலகாபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.[1][2]
நிசாம் சித்திக் | |
---|---|
படித்த இடங்கள் | |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
சான்றுகள்
தொகு- ↑ "2 city writers bag Sahitya Akademi award". Times of India. 2016-12-22. http://timesofindia.indiatimes.com/city/allahabad/2-city-writers-bag-Sahitya-Akademi-award/articleshow/56110975.cms. பார்த்த நாள்: 2016-12-22.
- ↑ (இந்தி) Sanjay Pande (2016-12-22). "'समालोचक हूं, उम्मीद न थी, मिला तो खुशी हुई'". Navbharat Times. http://navbharattimes.indiatimes.com/state/uttar-pradesh/varanasi/allahabad/sahitya-akademi-award-interview-with-nizam-siddiqui/articleshow/56105546.cms.