நினைவு அலைகள் 1 (நூல்)
நினைவு அலைகள் என்னும் நூலை பத்மஸ்ரீ டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு எழுதினார். இதை சாந்தா பதிப்பகத்தினர் வெளியிட்டனர்.
நூலாசிரியர் | டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | தன் வரலாறு |
வெளியீட்டாளர் | சாந்தா பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | முதல் பதிப்பு டிசம்பர் 1983; இரண்டாம் பதிப்பு 2004 |
பக்கங்கள் | 736 |
அடுத்த நூல் | நினைவு அலைகள் 2 |
தன் வரலாறாக மட்டுமன்றி, அவரது காலகட்டத்தில் காஞ்சிபுரத்தின் நிலை, திண்ணைப்பள்ளிகள், பொறுப்பான பள்ளி ஆசிரியர்கள், அக்கால சென்னை விக்டோரியா விடுதி, உடன் பயின்ற மாணவ நண்பர்கள், அவர்களின் பொழுதுபோக்குகள், மேல் சாதியினராகக் கருதப்பட்டோர் குடியிருக்கும் வீதிவழியே செல்ல மற்றோருக்கு உரிமை இல்லாக் காலகட்டம் என்று காலக்கண்ணாடியாக தமது நூலை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.
கல்வி முறை என்பது செலவு செய்யும் திறன் கொண்டோருக்கு மட்டுமே எட்டுமளவிற்கு இருந்ததையும், அதிலும் தாழ்த்தப்பட்டோர் விகிதம் மிக்குறைவாக இருந்தது முதற்கொண்டு வேலையில்லா இளைஞனாக வேலை தேடி, சிபாரிசு தேடி அல்லாடியது, கொள்கையை முன்னெடுத்து குடும்பத்தினரின் திருமணத் திட்டங்களுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து பெரியார் தலைமையில் கலப்பு மணம் புரிந்தது, பத்திரிக்கை துணையாசிரியர் , துணைப் பஞ்சாயத்து அலுவலர், இளந்துணைப் பள்ளி ஆய்வாளர் பதவி உட்பட செய்த பல்வேறு பணிகள் அவற்றில் ஏற்பட்ட இடையூறுகள், அக்காலத்து சிபாரிசு முறைகள்,பள்ளி ஆசிரியர்களின் உதவியும் அன்பும், கிராமப்பஞ்சாயத்து அமைப்புகள், அதன் தலைவர்களின் எளிய குணம், நீதிக்கட்சி குறித்த செய்திகள், பெரியாரின் பல போராட்டத் தகவல்கள் என பலர் அறியாத தகவல்களை ஆசிரியர் இப்பகுதியில் பதிவு செய்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்;பகுதி 1; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு;
வெளியிணைப்புகள்
தொகுhttp://www.tamilvu.org/library/nationalized/pdf/34-sundaravadivelu/nenaivualigal-1.pdf