நினைவு மண்டப நூலகம்

நினைவுமண்டப நூலகம் என்பது ஆண்டோவர், மாசச்சூசெட்ஸின் பொதுநூலகம் ஆகும். இக்கட்டிடம், இத்தாலியனேட் கட்டிட முறைகளைக் கொண்டு, 1873 ல் ஜே. எஃப். ஈட்டனின் வடிவமைப்பின்படி கட்டப்பட்டது. நூலகத்தை அமைக்க, பிரபல உள்ளூர் வர்த்தகர்கள் நிதிதிரட்டினர், மற்றும் ஆபட் அன்ட் ஜெங்கின்ஸ் எனப்படும் நிறுவனத்தினர் அதை கட்டியுள்ளனர். இன்று வரை ஊரின் நூலகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இக்கட்டிடம், ஊரின் உள்நாட்டுப்போர் வீரர்களுக்கும் நினைவுச்சின்னமாகவும் உள்ளது. 1920களில், ஷெப்லி, புல்ஃபின்ச், ரிச்சர்ட்ஸன், மற்றும் ஆபட் என்பவர்களால் இந்நூலகம் புதுப்பிக்கப்பட்டிருந்த போது, அதனது காலனித்துவ அம்சங்களை முதல்முறையாக ஏற்றுக்கொண்டது.[1]

1982 ல், இக்கட்டிடம், தேசிய பழமையான இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

மேலும் காண்பதற்கு தொகு

  • National Register of Historic Places listings in Andover, Massachusetts
  • National Register of Historic Places listings in Essex County, Massachusetts

மேற்கோள்கள் தொகு

  1. "MACRIS inventory record for Memorial Hall Library". Commonwealth of Massachusetts. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.[தொடர்பிழந்த இணைப்பு]

இதர இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவு_மண்டப_நூலகம்&oldid=3457738" இலிருந்து மீள்விக்கப்பட்டது