நிபந்தனை எச்சம்
நிபந்தனை எச்சம் என்பது முற்றுப்பெறாத வினையெச்சங்களில் ஒன்று.
மழை பெய்தால் குளம் நிறையும் என்னும் வாக்கியத்தில் பெய்தால் என்பது நிபந்தனை எச்சம். ஆல் இடைச்சொல் உருபை இணைத்து இது உருவாக்கப்படுகிறது. மூன்றாம் வேற்றுமை உருபாக வரும் கருவிப்பொருள் வேறு. 'கோலால் எழுதினான்' என்னும்போது கோலால் என்பதிலுள்ள 'ஆல்' வேறு. இது பெயர்ச்சொல்லோடு இணைந்து வரும் வேற்றுமை உருபு.
நிபந்தனை எச்சத்தில் வரும் ஆல்-உருபு வினைச்சொல்லோடு இணைந்து வருகிறது. எடுத்துக்காட்டு
- வந்தால் பெசுவேன்.
- "நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்று ஆங்கால் அல்லல் படுவது எவன் - திருக்குறள்
- "நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா" - ஔவையார் பாடல்