நியமம் (ஊர்)
நியமம் என்னும் சொல் பெருநகரத் தெருக்களில் இருபுறமும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மாடங்களைக் குறிக்கும். [1] [2]
எனினும் சேரநாட்டில் குன்றுகள் சூழ்ந்த பகுதியில் நியமம் என்னும் பெயர் பூண்ட ஊர் ஒன்று இருந்தது எனக் கொள்ள இடமுண்டு. [3]
இவ்வூரில் கடல், மலை, ஆறு ஆகியவற்றின் வளங்கள் பல்கிக் கிடந்தன. [4]
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் சொல்கெழு குட்டுவன் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் சேரமன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டுச் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த இந்த ஊரைச் சேரமான், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போரிட்டு அழிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.[5]
அடிக்குறிப்பு
தொகு- ↑ மதுரைக் கடைத்தெருவில் ஓவியங்களைப் போல மாடங்கள் ஓங்கிய இரு பெரு நியமங்கள் இருந்தன - மதுரைக்காஞ்சி 365
- ↑ நன்னன் தலைநகரம் செங்கண்மாவில் யாறு கிடந்து அன்ன தெருவில் விழுப்பெரு நியமம் இருந்தது. – மலைபடுகடாம் – 480
- ↑ காந்தள் அம் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் செங்கோட்டு ஆமான் ஊனொடு காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும் குன்றுதலை மணந்த புன்புல வைப்பு – பதிற்றுப்பத்து 30 பல்யானைச் சொல்கெழு குட்டுவன் காலம்
- ↑ கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர் கொடிநிழல் பட்ட பொன்னுடை நியமத்துச் சீர்பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் வயவர் வேந்தே - பதிற்றுப்பத்து 15 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலம்
- ↑ வினைஞர் புல் இகல் படுத்து கள்ளுடை நியமத்து ஒள்விலை கொடுக்கும் வெள் வரகு விளைந்த கொள்ளுடைக் கரம்பைச் செந்நெல் வல்சி அறியார் - பதிற்றுப்பத்து 75