நியுரெக் அணை
நியுரெக் அணை (Nurek Dam) மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானில் உள்ள நிலப்பகுதியை கரையாக கொண்ட ஒரு அணைக்கட்டு ஆகும். இது தஜிகிஸ்தானின் வக்ஷ் நதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை தஜிகிஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் ஒரு குடியரசாக இருந்தபோது, 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1980 ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 300 (984 அடி) மீட்டர் உள்ள இந்த அணையே உலகின் மிக உயரமான அணையாகும்.[1] இது நாட்டின் தலைநகரான துசான்பேவிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. நீர்மின்சாரம் எடுப்பதற்காக இதில் 305 மெகாவாட் ஆற்றலுடைய ஒன்பது சுழலிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை சீரமைக்கப்பட்டு அவற்றின் திறன் 335 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.
நியுரெக் அணை | |
---|---|
நியுரெக் அணை | |
அமைவிடம் | நியுரெக், தஜிகிஸ்தான் |
கட்டத் தொடங்கியது | 1961 |
திறந்தது | 1979, 1988 |
உரிமையாளர்(கள்) | Barqi Tojik |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | அக்ஷ் ஆறு |
உயரம் | 304 m (997 அடி) |
நீளம் | 700 m (2,300 அடி) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | நியுரெக் வ்நீர்த்தேக்கம் |
மொத்தம் கொள் அளவு | 10.500 km3 (8,512,000 acre⋅ft) |
மேற்பரப்பு பகுதி | 98 km2 (38 sq mi) |
மின் நிலையம் | |
இயக்குனர்(கள்) | Barqi Tojik |
சுழலிகள் | 9 x 335 MW Francis turbines |
நிறுவப்பட்ட திறன் | 3,015 MW |
இந்த அணை உருவாக்கிய நீர்தேக்கத்திற்கு நியுரெக்(நுரெக்) என்று பெயர். இதுவே தஜிகிசுத்தானின் பெரிய நீர்ந்தேக்கமாகும் இதன் கொள்ளளவு 10.5 கன கி.மீ. இந்த நீர்த்தேக்கத்தின் நீளம் 70கிமீ, இதன் பரப்பளவு 98 சதுர கிமீ.
உசாத்துணை
தொகு- ↑ "Nurek Dam". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-12-30.