நியூயார்க் மாநில பார்வையற்றோர் பள்ளி

பாலர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை யிலான பார்வையற்றோர் பள்ளி

நியூயார்க் மாநில பார்வையற்றோர் பள்ளி [New York State School for the Blind) அமெரிக்காவின் நியூயார்க்கு மாநிலத்திலுள்ள படேவியா நகரத்தில் அமைந்துள்ளது. பார்வையற்ற மாணவர்களுக்காக பாலர் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்புவரையிலான கல்வியை அளிக்கும் பொது உறைவிடப் பள்ளியாக இது இயங்குகிறது. நியூயார்க் மாநில அரசு பள்ளியை இயக்குகிறது.

1865 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று நியூயார்க் மாநில சட்டமன்றத்தால் சட்டமாக நிறைவேற்றப்பட்டு அச்சட்டத்தின் அடிப்படையில் இப்பள்ளி நிறுவப்பட்டது. 1866 ஆம் ஆண்டு பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1868 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் கட்டடங்கள் லட்டி முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கின. [1]

பள்ளியில் பழைய மாணவர் சங்கம் 1918 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [2]

2005 ஆம் ஆண்டு நியூயார்க்கு மாநில பார்வையற்றோர் பள்ளியில் 73 மாணவர்கள் படித்தனர். நியூயார்க்கு மாநிலத்தின் மேற்குப் பகுதி பெரும்பான்மை மாணவர்களின் பிறப்பிடமாக இருந்தது. [3]

பள்ளி வளாகம்

தொகு

பள்ளி நாட்களில் மாணவர்கள் தங்கி படிக்குமிடம் உட்பட[4] நியூயார்க் மாநில பார்வையற்றோர் பள்ளி சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "History". New York State School for the Blind. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  2. Krencik, Jim (2018-09-13). "School for the Blind marks 150th anniversary". The Daily News. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23. [...]in connection with the Alumni Association turning 100.
  3. "Reports of abuse probed at State School for Blind". Democrat and Chronicle. Associated Press (Rochester, New York): pp. 1B, 4B. 2005-05-13.  - Clipping of first and of second page, at Newspapers.com.
  4. "About Us". New York State School for the Blind. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  5. Brown, Bill (2009-05-26). "School for the Blind looks back on 140 years of dedicated service". Buffalo News. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.

புற இணைப்புகள்

தொகு