நிருத்தியம் (பரதநாட்டியம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நிருத்தியம் என்பது நிருத்த முறையோடு கூடிய பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் ஆடல் முறையாகும். பாட்டின் பொருளுக்கேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு, அதன் கருத்துக்களை விளக்கும் அபிநயக்கைகளை இயக்கியவண்ணம், பாதங்களையும் பாட்டிற்கேற்ப இயங்கவைப்பது நிருத்திய இயல்பாகும். கண்களாலும் முகத்தாலும் கை முத்திரைகளாலும் கருத்துகளையும் உள்ளத்து உணர்வுகளையும் வெளிக்காட்டும் ஆடல் முறை. இதில் பாடல் சிறப்பிடம் பெறும். பரதநாட்டியத்தில் சப்தம், பதவர்ணம், வர்ணம் ஆகிய நிகழ்ச்சிகள் நிருத்திய வகையைச் சார்ந்தன.