நிருத்ய கோபால் தாஸ்
மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் (Nritya Gopal Das) (பிறப்பு; 1938) அயோத்தியின் மணிராம் தாஸ் கி சவானி என்ற மிகப்பெரிய கோவிலின் தலைவரும் ராம ஜென்மபூமி அறக்கட்டளை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை ஆகியவற்றின் தலைரும் ஆவார். இவர் கேசவ தேவ் கோயிலின் தலைவராகவும் உள்ளார்.
மகந்த் நிருத்ய கோபால் தாஸ் | |
---|---|
பிறப்பு | 11 சூன் 1938 கேர்காலா/கோலா கிராமம், மதுரா மாவட்டம், இந்தியா |
சமயம் | இந்து சமயம் |
தலைப்புகள்/விருதுகள் |
|
குரு | மகந்த் ராம் மனோகர் தாஸ் |
பின்னணி
தொகுஉத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்திலுள்ள கேர்காலா கிராமத்தில் 1938 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி பிறந்தார். [1] 1953 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, வணிகவியல் படிப்பதற்காக மதுராவில் உள்ள கல்லூரியில் அனுமதி பெற்றார். ஆனால் படிப்பை முடிப்பதற்கு முன்பு 12 வயதில் [2] அயோத்திக்குச் சென்றார். அயோத்தியில், இவர் மஹந்த் ராம் மனோகர் தாஸின் சீடரானார். பின்னர், வாரணாசியிலுள்ள சமசுகிருத பல்கலைக்கழகத்தில் சாஸ்திரி (பட்டம்) பட்டம் பெற்றார் . 1965 ஆம் ஆண்டில், இவர் தனது 27வது வயதில், ஸ்ரீ மணிராம் தாஸ் சவானியின் ஆறாவது மகந்திற்குப் பிறகு மகந்த் ஆனார். [1] இந்த கோவில் நகரின் முக்கிய மத மற்றும் ஆன்மீக ஈர்ப்புகளில் ஒன்றாகும். மேலும் மகந்த் நிருத்ய கோபால் தாஸ் தினமும் நூற்றுக்கணக்கான யாத்ரீகர்களை சந்திக்கிறார். இராமாயண பவன் மற்றும் ஸ்ரீ சார் தாம் கோவில் உள்ளிட்ட கோவில்களை கட்டிய பெருமைக்குரியவர். 500 சாதுக்கள் தங்கியிருக்கும் "மணிராம் சவானி"யை நடத்தி வருகிறார். [2] இவர் 1984 [2] ஆண்டு முதல் இராம ஜென்மபூமி இயக்கத்துடன் தீவிரமாக தொடர்பு கொண்டுள்ளார். 2006 இல் இராமச்சந்திர தாஸ் பரமஹம்சர் இறந்தபோது ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவராக இவர் பொறுப்பேற்றார், தற்போது அவர் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். [1] பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இவரும் ஒருவர். [3] [4] இவர் கேசவ தேவ் கோயில் அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Uprety, Ajay (6 November 2019). "Who is Mahant Nritya Gopal Das, head of Ram Janmabhoomi Nyas". The Week (in ஆங்கிலம்) (published 16 December 2018). பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
- ↑ 2.0 2.1 2.2 Bakshi, Gorky (2020-02-20). "Ram Mandir Trust appoints Nritya Gopal Das as Chairman, Champat Rai as General Secretary". Jagranjosh.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
- ↑ "Outlook India Photo Gallery - Mahant Nritya Gopal Das". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
- ↑ Iyer, Aishwarya S. (2020-02-20). "2 Accused of Babri Masjid Demolition Now Part of Ram Mandir Trust". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.