நிருபமா ராத்

நிருபமா ராத், இந்தியாவைச் சேர்ந்தமகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவராவார். இவர் இந்திய சுதந்திர போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளார். மேலும் பல்வேறு ஒரிய புத்தகங்கள், மருத்துவம் சம்பத்தப்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். சிறந்த சமூக ஆர்வலருமான இவர் இந்திய மருத்துவ சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராவார். [1] [2] 1987 முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். சிறுவயதிலிருந்தே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், 1942ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார்.

பல்வேறு சமூக சேவைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், உத்க்லா மகிளா சம்மிலானி மற்றும் உழைக்கும் பெண்கள் விடுதியின் நிறுவனத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். [1]

இலக்கியப் படைப்புகள் தொகு

மருத்துவப்பணிக்காக மட்டுமல்லாது இலக்கிய ஆர்வத்திற்காகவும், எழுத்து படைப்பிற்காகவும் அறியப்பட்ட இவரின் படைப்புகள் சில,

  • பிரசுதி பிக்யான்' - செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான பாடப்புத்தகமாக எழுதப்பட்டது.
  • பாரதிய ஸ்வாதிநாதா ரே நாரி
  • அலிபா ஸ்ம்ருதி
  • அபுலா அனுபூதி
  • சமாஜிக் நிர்யதானா
  • மசாலா
  • நாரி ஓ பிசராலயா
  • திகந்தா
  • கன்யா மற்றும்
  • சிசு சம்பதா போன்ற புத்தகங்கள் குறிப்புடத்தக்கவை,

இத்தகைய ஒரிய இலக்கிய பங்களிப்பை மேலும் பாராட்டும் வகையில் 2003  ம் ஆண்டு ஒரிசா சாகித்ய அகாடமி சம்மான் விருதும் அவருக்கு வழக்கப்பட்டுள்ளது. . [2]

விருதுகள் மற்றும் கௌரவங்கள் தொகு

  • 1972ல் சோவியத் லேண்ட் நேரு விருது
  • 1993 இல் தேசிய ஒற்றுமை விருது
  • சுப்ரதிவா மற்றும் சலபத் சம்மான்
  • 2003 இல் ஒரிசா சாகித்ய அகாடமி சம்மான்

இறப்பு தொகு

டாக்டர் நிருபமா ராத் 2011 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள அவரது தர்கா பஜார் இல்லத்தில் காலமானார். தனது எண்பத்தியாறு வயதில் காலமான அவருக்கு டாக்டர் ஜெயந்த் ராத் மற்றும் ரஜத் ராத் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது கணவர், முன்னாள் அட்வகேட் ஜெனரல் கங்காதர் ராத், 2008ம் ஆண்டு இறந்தார். [3]

வெளியீடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Dr Nirupama Rath passes away". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.
  2. "Eminent doctor and social worker Nirupama Rath dies | OTV News". Latest Odisha News, Breaking News Today | Top Updates on Corona - OTV News (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-04-07. பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருபமா_ராத்&oldid=3671348" இலிருந்து மீள்விக்கப்பட்டது