நிர்மலா சுரேஷ்

நிர்மலா சுரேஷ் (சூன் 18, 1950 - மே 27, 2021) ஒரு பெண் கவிஞரும் எழுத்தாளரும் ஆசிரியரும் ஆவார்.

கல்வி

தொகு

இருதயராஜ்-ரெஜினா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்த இவர் திருச்சி ஹோலி கிராசு கல்லூரியில் பயின்றார்[1]. சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

நிர்மலா சுரேஷ் பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார்[1]. ஹைக்கூக் கவிதைகளைப் பற்றிய ஆய்வுக்காக இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 1980களில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்;

பாவேந்தர் பாரதிதாசன் விருது

தொகு

தமிழ்க் கவிஞர்களுக்காக வழங்கப்படும் தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதினை 1990ஆம் ஆண்டு பெற்றார்[2].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Dr. Nirmala Suresh 1950 - 2021". forevermissed.com. பார்க்கப்பட்ட நாள் 27 Dec 2021.
  2. "விருது பெற்றோர் பட்டியல்". tamilvalarchithurai.com. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_சுரேஷ்&oldid=3352150" இலிருந்து மீள்விக்கப்பட்டது