நிர்வாக முதுகலைப் பட்டம்

நிர்வாக முதுகலைப் பட்டம் அல்லது மேம்பட்ட ஆய்வுகளுக்கான முதுகலை பட்டப் படிப்பானது நடுத்தர தொழில் நிர்வாக அலுவலர்களுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டது. கலைத் துறையில் நிர்வாக முதுகலை பட்டம், அறிவியல் துறையில் நிர்வாக முதுகலை பட்டம் போன்ற பொதுவான தலைப்புகளின் கீழ் முதுகலை பட்டம் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம், தொடர்புகளில் முதுகலை பட்டம் அல்லது மனிதவள மேலாண்மை குறித்த மேம்பட்ட ஆய்வுகளில் முதுகலை பட்டம் போன்ற குறிப்பிட்ட தலைப்பின் கீழ் முதுகலை பட்டம் பெறுதல் இவற்றுள் அடங்கும்.

அமைப்பு

தொகு

நிர்வாக முதுகலை பட்டத்திற்கு படிப்பவர்கள் வழக்கமாக முழுநேர வேலையில் இருப்பவர்கள், அதனால் அவர்களுக்கான படிப்பு அமைப்பு வேலையினைச் சார்ந்தே இருக்கும். பெரும்பான்மையான நிர்வாக முதுகலை பட்ட படிப்புகள் மாதத்தில் பல நாட்கள் முழுவதும் நடைபெறுவதாக இருக்கும் (ஒரு வாரத்திற்கு மேல் நடைபெறாது), இவ்வாறு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தொடரும் படிப்பாகும்.[1] இருப்பினும் சில படிப்பு நேரங்கள் சற்று மாற்றியமைக்கப்பட்டு படிப்பவர்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரவு நேர வகுப்புகள் மட்டும் அல்லது வார இறுதி நாட்களில் நடைபெறும் வகுப்புகள் மட்டும் போன்றவை அடங்கும்.[2]

போலோக்னா அமைப்பின்படி படிப்பில் கலந்துகொள்பவர்கள், ஐரோப்பிய கடன் மாற்றம் மற்றும் திரட்சி அமைப்பின் 60 மதிப்பு புள்ளிகளைப் பெற்றால் மட்டுமே பட்டம் பெற முடியும். பிற அமைப்புகளில், அவர்கள் கல்வியில் பெறும் மதிப்பு புள்ளிகள் மற்றும் படிப்பிற்கான மதிப்புப் புள்ளிகளைப் பொறுத்து பட்டப் படிப்பினை நிறைவு செய்ய இயலும்.

வகைகள்

தொகு

1. வணிக நிர்வாகத்தில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு

2. நிதி சந்தைகளில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு

3. உடல் நல மேலாண்மையில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு

4. மேலாண்மையில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு

5. அறிவியல் மற்றும் தொடர்பு துறையில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு

6. சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு

7. அறிவியல் மற்றும் உடல்நல அமைப்புகளில் நிர்வாக முதுகலை பட்ட படிப்பு

சேர்க்கை

தொகு

நிர்வாக முதுகலை பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கண்டிப்பாக பின்வருவனவற்றினைப் பெற்றிருக்க வேண்டும்:

1. இளங்கலைப் பட்டம் அல்லது உயர்நிலை பள்ளிச் சான்றிதழ்

2. படிப்பிற்குரிய பிரிவில் சுமார் 4 முதல் 15 ஆண்டுகள் வரை வேலை செய்த அனுபவம் இருக்க வேண்டும் (அல்லது அதற்குத் தகுந்த அளவிற்கு பின்புலம் மற்றும் படிப்பின் பிரிவின் மீது தனிப்பட்ட முறையில் ஆர்வமுடையவராக இருத்தல் வேண்டும்)

3. தலைமைத் திறன்

மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு நாட்டினைப் பொறுத்தும் வேறுபடும்.[3] சில பல்கலைக் கழகங்கள் அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள் பட்டதாரி பதிவு தேர்வு மதிப்பெண்கள், பட்டதாரி மேலாண்மை சேர்க்கைக்கான தேர்வு மதிப்பெண்கள் அல்லது பிற தரமான கணித தேர்வு மதிப்பெண்களை சேர்க்கையின்போது எதிர்பார்க்கின்றனர்.[4]

பட்டபடிப்பிற்கான தேவைகள்

தொகு

போலோக்னா செயல்பாடுகளின் மூலம் பட்டப்படிப்பினை முடிப்பதற்கு ஐரோப்பிய கடன் மாற்றம் மற்றும் திரட்சி அமைப்பின் வழிமுறையில் 60 மதிப்புப் புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். அமெரிக்க கல்விமுறையின்படி 33 மதிப்புப் புள்ளிகளைப் பெற்றிருந்தால் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பட்டப்படிப்பினை முடிக்க இயலும்.[5] இந்த மதிப்புப் புள்ளிகள் ஒவ்வொரு முறையினையும் பொறுத்து வேறுபடும். படிப்பு முடியும் தருவாயில் அதில் பங்குபெறுபவர்கள் களத்தின் திட்டங்கள் குறித்த அறிக்கையினை சமர்பிக்க வேண்டும், அதற்காக அவர்கள் சுமார் 350 முதல் 500 மணி நேரங்களை செலவிட வேண்டிவரும்.[6]

பிற நாடுகளில் வழங்கப்படும் படிப்புகள்

தொகு

ஐரோப்பா

தொகு

ஐரோப்பாவில் பல பல்கலைக் கழகங்கள் முதுகலைப் பட்ட படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பினை வழங்குகின்றன. 1999 ஆம் ஆண்டில் லுகனோ பல்கலைக்கழகம் முதன் முறையாக அறிவியல் மற்றும் தொடர்பு துறையில் நிர்வாக மேலாண்மைக்கான முதுகலை பட்டத்திற்கான படிப்பினை சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தியது. அதன் பயிற்று மொழி ஆங்கிலத்தில் இருந்தது. 2006 ஆம் ஆண்டில் அதே பல்கலைக்கழகம் மனிதவள மேலாண்மை குறித்த மேம்பட்ட ஆய்வுகளில் முதுகலை பட்டத்திற்கான படிப்பினை சர்வதேச நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சர்வதேச முன்னேற்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்காக அறிமுகம் செய்வித்தது.[7]

ஆஸ்திரேலியா

தொகு

கலைத் துறையில் நிர்வாக முதுகலை பட்டத்தினை மெல்போர்ன் பல்கலைக் கழகம் மனிதவள மேம்பாடு மற்றும் சமூக அறிவியல் துறையில் மட்டும் வழங்குகிறது.[8] ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசு பள்ளி அமைப்பானது பொது நிர்வாக திட்டத்தில் நிர்வாக முதுகலை பட்டத்திற்கான படிப்பில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டின் பிற பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறது.[9]

அமெரிக்கா

தொகு

பிங்காம்டன் பல்கலைக்கழகம் அறிவியல் மற்றும் உடல்நல அமைப்புகளுக்கான படிப்பிற்கான நிர்வாக முதுகலை படிப்பினை மான்ஹட்டன் பகுதியில் வழங்குகிறது. இதன் பயன்பாடுகள் பின்வருமாறு:

1. சுகாதார விநியோக அமைப்புகளில் தலைமைப் பண்பினை அதிகரித்தல்

2. பொறியியல் நுட்பங்கள், தரவு மற்றும் செயல்பாட்டு முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் சுகாதார மேம்பாடுகளை கண்டறிதல் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்

3. களத்தின் நிரூபிக்கப்பட்ட தரவுகள் மற்றும் அனுபவமிக்க வல்லுநர்களுடன் தொடர்புகொள்ளுதல் [10]

குறிப்புகள்

தொகு
  1. Bologna Process: Swiss National Report 2007-2008
  2. "Executive Masters". itm.edu. Archived from the original on 16 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 23 May 2017.
  3. Interview with the Head of USI Executive Master of Science in Communication program
  4. "Azusa Pacific University admission requirements". Archived from the original on 2012-09-30. பார்க்கப்பட்ட நாள் 2017-05-23.
  5. U.S. Department of Education https://www2.ed.gov/about/offices/list/ous/international/usnei/us/credits.doc
  6. Interview with Head of the USI EMSCom program
  7. "MASHLM".
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-12. பார்க்கப்பட்ட நாள் 2017-05-23.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-22. பார்க்கப்பட்ட நாள் 2017-05-23.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-23.