நிறைவுற்ற சேர்மங்கள்

நிறைவுற்ற சேர்மங்கள் (Saturated compounds) என்பது வேதிச் சேர்மங்களின் ஒரு பிரிவு ஆகும். கரிம வேதியியலில், கரிமச்சேர்மங்களை நிறைவற்ற சேர்மங்கள், நிறைவுறாத சேர்மங்கள் என்று இரு வகையாகப் பிரிப்பர். நிறைவுற்ற என்ற சொல் தெவிட்டல், நிரம்பல். பூரிதம், அதிகபட்சம் எனப் பல்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

கரிம வேதியியல்தொகு

ஐதரோ கார்பன்கள்தொகு

 
ஈத்தேன் வாய்ப்பாடு

கரிம வேதியியலில் இரட்டைப்பிணைப்பு அல்லது முப்பிணைப்பு இல்லாத கரிம சேர்மங்கள் நிறைவுற்ற சேர்மங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டாக பின்வரும் சேர்மங்களைக் கருதுவோம். 1. ஈத்தேன். 2. எத்திலின். 3. ஈத்தைன் இவற்றுள் ஈத்தேன் (C2H6) என்பது ஒரு நிறைவுற்ற ஐதரோ கார்பன் ஆகும். ஏனெனில் இதன் கட்டமைப்பில் உள்ள கார்பன் – ஐதரசன் பிணைப்புகள் யாவும் ஒற்றைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளன. இரட்டைப்பிணைப்போ அல்லது முப்பிணைப்போ இங்கு இல்லை. ஆனால் எத்திலினில் (C2H4) ஓர் இரட்டைப்பிணைப்பும், ஈத்தைனில் (C2H2) ஒரு முப்பிணைப்பும் உள்ளன. எனவே இவை இரண்டும் நிறைவுறாத சேர்மங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

நிறைவுறுதல் என்ற கோட்பாட்டை பெயரிடும் முறைகள், வாய்ப்பாடுகள், பகுப்பாய்வு சோதனைகள் மூலம் விவரிக்க இயலும். ஐயுபிஏசி பெயரிடும் முறையில் நிறைவுறாத நிலை பிணைப்பின் வகை மற்றும் இருப்பிடம் ஆகியன குறிப்பிடப்படுகின்றன. இவை தவிர புரோமின் எண் சோதனை, நிறை நிறமாலையியல், அகச்சிவப்பு நிறமாலையியல், அணுக்கருக் காந்த உடனிசைவு சோதனைகளால் இத்தன்மை உறுதிசெய்யப்படுகிறது.

கொழுப்பு அமிலங்களையும் இந்த வகையில் நிறைவுற்ற கொழுப்புகள், நிறைவுறாத கொழுப்புகள் என்று அவற்றின் பகுதிக் கூறுகளைக் கொண்டு பிரிப்பர்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. Alfred Thomas (2002). "Fats and Fatty Oils". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a10_173.