நிலக்காற்று
காற்று வகை
இரவில் நிலப்பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசும் காற்று நிலக்காற்று (Land breeze) என்று அழைக்கப்படுகிறது.
மாலைப்பொழுதில் நிலமானது பகலில் மிக விரைவாக பெற்ற வெப்பத்தை மிக விரைவாக இழந்து, குளிர்ச்சியடைந்து ஈரப்பதக் காற்றுடன் அதிக காற்றழுத்த மண்டலமாகக் காணப்படுகிறது. அதே மாலை நேரத்தில் பகலில் மிக மெதுவாக சூடேறிய நீர்ப்பகுதியானது பெற்ற வெப்பத்தை மெதுவாக இழக்கும். ஏனெனில் நீா்ப்பகுதியில் ஆழமாக ஊடுருவிச் சென்ற வெப்பம் வெளியேற கூடுதல் நேரமாகும். இதனால் கடற்பரப்பின் மீது நிலப்பரப்பைக் காட்டிலும் அதிக வெப்பம் இருக்கும். அதிக வெப்பம் காற்று அழுத்தம் குறைவதற்கு காரணமாகிறது. இதனால் மாலை நேரத்தில் இருந்து அதிக காற்றழுத்தப் பகுதியான நிலத்தில் இருந்து குறைந்த காற்றழுத்தப் பகுதியான கடலை நோக்கி வீசுகிறது.[1]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ JetStream: An Online School For Weather (2008). "The Sea Breeze". National Weather Service. Archived from the original on 2006-09-23. பார்க்கப்பட்ட நாள் 2006-10-24.