நிலப்பரப்பு ஒளிப்படக்கலை

ஒளிப்பட வகை

ஒளிப்படவியலில் நிலப்பரப்பு ஒளிப்படக்கலை அல்லது இயற்கை புகைப்படம் (Landscape photography) எடுத்தல் என்பது, இயற்கை மற்றும் வெளிப்புறங்களைப் படம்பிடிக்கும் ஒரு ஒளிப்படக் கலையாகும். பார்வையாளர்களைக் காட்சிக்குள் கொண்டுவரும் விதத்தில், பிரமாண்டமான நிலப்பரப்புகள் முதல் சில நெருக்கமான விவரங்கள் வரை, சிறந்த புகைப்படங்கள் எடுத்தலில் ஒரு புகைப்படக் கலைஞரின் இயற்கையுடனான தொடர்பை நிரூபிக்கின்றன. [1]

டெட்டன்ஸ் மற்றும் பாம்பு ஆறு (1942) மூலம் ஆன்சல் ஆடம்ஸ்

பல்வேறு வகையான நிலப்பரப்பு புகைப்படம் எடுத்தலில், பிரபலமான புகைப்படக் கலைஞர்களிடையே பல காரணங்கள் உள்ளன. ஒப்பீட்டளவில் அடிப்படையான கேமராக்கள் மற்றும் வில்லைகளில் கூட, வியக்கத்தக்க நிலப்பரப்பு படங்களைப் பிடிக்க முடியும் என்பதன் காரணமாக எளிதானது.[2]

சில மாறுபாடுகளை முயற்சிக்கவும்

தொகு

நிலப்பரப்பு புகைப்படம் எடுத்தலில், உங்கள் காட்சிகளில் ஆழம் மற்றும் கவனம் இரண்டையும் வலியுறுத்த, அங்கு கிடைக்கக்கூடிய முன்னணி கோடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்; உதாரணமாக வேலிகள், மரக்கட்டைகள் அல்லது ஆறுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி, படத்தின் மையப் புள்ளியில் பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கலாம். உங்கள் பார்வையின் ஊடாக சுற்றி நடந்து அந்த கோடுகளைக் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக, உயர்நிலை அல்லது குறைந்த கோணத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள். உங்கள் சட்டகத்தில் சமநிலை உணர்வை உருவாக்க, மூன்றில் ஒரு பங்கு விதியைப் பயன்படுத்தலாம்.[3]

மேற்கோள்கள்

தொகு