நிலவொளிப் பணி
நிலவொளிப் பணி அல்லது இரண்டாம் பணி அல்லது கூடுதல் பணி (side job, also informally called a side hustle or side gig), ஒருவர் தன் முதன்மையாக பணியைச் செய்து கொண்டே கூடுதலாக ஒரு வேலை செய்து பணம் ஈட்டுவதாகும்.[1]அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இவ்வாறு இரண்டாவது பணி செய்து பணம் ஈட்டுவோர் அதிகம் உள்ளனர். ஒரு நபரின் முதன்மை வேலை வருமானத்தை மட்டுமே வழங்கினால், அவர்கள் விரும்பிய பக்க வேலையைத் தொடரலாம், அது பொதுவாக "நாள் வேலை" என்று ஐக்கிய இராச்சியத்தில் அழைக்கப்படுகிறது.[2]
நிலவொளிப் பணி
தொகுதகவல் தொழில் நுட்பத் துறையில் முதன்மையாக ஒரு பணியை செய்து கொண்டிருக்கும் போது மற்றொரு பணியை செய்வதற்கு பெயர் ஆங்கிலத்தில் மூன்லைட்டிங் எனப்படுகிறது. சில நேரங்களில் அந்த இரண்டாவது பணியை முதன்மைப் பணி நிறுவனத்திற்கு தெரியாமல் இரகசியமாக செய்வதும் உண்டு. சில நேரங்களில் தான் பணிபுரியும் முதன்மை நிறுவனத்தின் போட்டி நிறுவனத்திற்காக கூடுதல் பணி செய்து பொருள் ஈட்டுவர். தனியார் வணிக நிறுவனஙகளில் பணிபுரியும் ஊழியர்கள், நிலவொளிப் பணி குறித்து நிறுவனம் வைத்திருக்கும் எந்தக் கொள்கைகளுக்கும் உட்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் அரசு நிறுவனங்களில் முதன்மை பணி தவிர கூடுதலாக வேறு பணி செய்து பொருள் ஈட்ட அனுமதிக்கப்படுவதில்லை. தகவல் தொழில்நுடப் பெரு நிறுவனங்களில் முதன்மைப் பணி செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறாமல் நிலவொளிப் பணி இருக்க வேண்டும் என்றும் சில நிறுவனங்கள் எச்சரிக்கிறது.[3]
நிலவு வெளிச்சம் பணியில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணங்கள், இந்த நிச்சயமற்ற பணிச் சந்தையில் சீரான வருவாயைப் பெற இவ்வாறு இரண்டாம் பணியில் ஈடுபடுகின்றனர். வேறு சிலரோ தங்களுக்கு பிடித்தமான வேலையை செய்ய இவ்வாறு இரண்டாம் பணியில் ஈடுபடுகின்றனர். முதன்மை நிறுவனத்தின் போட்டி நிறுவனத்தில் நிலவு வெளிச்சம் பணியை தவிர்ப்பது நல்லது.
சில ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தங்களுக்கு பிடித்தமான வேலையை செய்து அதற்கான ஊதியத்தையும் பெறுவது என்பதற்கும், முழு நேரமாக இரண்டாவதாக ஒரு பணியில் ஈடுபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
கொரானா தொற்று நோய் காலத்தில்
தொகுகொரோனா பெருந்தொற்று சமயத்தில்தான் வாகனம் ஓட்டுதல் போன்ற நிலவொளிப் பணி அதிகரித்தது. பொதுவாக வாகனம் ஓட்டுதல், ஆன்லைன் ரீடைலிங், கிராஃபிக் டிசைனிங் மற்றும் கன்டண்ட் ரைட்டிங் ஆகிய துறைகளில் பலர் இரண்டாம் பணியை தேர்வு செய்கின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன் லைட்டிங் என்பது பொதுவான ஒன்றாக உள்ளது. "ஆனால் பிற நிறுவனத்திலிருந்து தகவல்களை திருட தொடங்கினாலோ அல்லது போட்டி நிறுவனங்களுக்கு வழங்கினாலோ அது முற்றிலும் சட்டவிரோதமானதாகும்.
விப்ரோ நிறுவனம் மூன் லைட்டிங்கில் ஈடுபட்டவர்களை எல்லாம் பணியிலிருந்து நீக்கிவிடவில்லை. போட்டி நிறுவனங்களுக்கு பணி செய்தவர்களை மட்டுமே பணியிலிருந்து நீக்கியது".[4]சில தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் அரிதாகவே பிற நிறுவனங்களில் நிலவொளிப் பணிபுரிய அனுமதிக்கிறது.
நிலவொளிப் பணியில் நிறுவனங்களின் கவலைகள்
தொகுநிலவொளிப் பணிக்கு எதிராக நிறுவனங்கள் கொண்டிருக்கும் முதன்மையான கவலைகள் தரவு மற்றும் இரகசியத்தன்மை மீறல்கள் மற்றும் உற்பத்தித்திறன் இழப்பு. இதேபோன்ற தொழில் மற்றும் வேலையில் பணிபுரியும் பணியாளர்கள் வணிக இரகசியங்களை வெளியிடுவதற்கான வாய்ப்பை நிலவொளிப் பணி வழங்கலாம். போட்டியிடும் நிறுவனத்திற்கு பயனளிக்கும் இரகசிய தகவலை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை பணியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பணியாளர்கள் நீண்ட நேரம் பணிபுரிந்தால், நிலவொளி பணியானது, உடல் சோர்வு காரணமாக, பணியாளரின் கவனச்சிதறல், பலனளிக்காதது மற்றும் வேலைப் பொறுப்புகளை புறக்கணிக்கச் செய்யும். ஊழியர்கள் தங்கள் இரண்டாவது வேலைக்கு முதன்மை நிறுவனத்தின் வளங்களைப் பயன்படுத்தலாம், இதனால் இயக்க செலவுகளை அதிகரிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ McDowell, Erin (June 28, 2019). "21 high-paying side jobs you can do in your spare time". Business Insider. https://www.businessinsider.com/earn-extra-money-with-these-21-high-paying-side-jobs-2019-6.
- ↑ "Definition of DAY JOB". Merriam-Webster.
- ↑ Explained: What is moonlighting? Is it ethical if you do more than one job in India?
- ↑ What Is Moonlighting? Here’s Why Wipro Fired 300 Employees For Doing It