நிலாக் குப்பல்

நிலாக் குப்பல் விளையாட்டு நிலா வெளிச்சத்தில் விளையாடப்படும். இதனை சிறுவர் சிறுமியர் விளையாடுவர்.

ஆடும் முறை

தொகு

தெருவில் மண்குவியல் வைத்து உப்பு என்பர். இரண்டு அணியினர் இருவேறு பக்கம் சென்று சில பல உப்பு வைப்பர். பின் உத்தி இடத்தில் மீண்டும் கூடுவர். திசைமாறிச் சென்று எதிர் அணியினர் வைத்த உப்புக் குவியல்களை அழிப்பர். <

அழிக்கும்போது பின்வரும் பாட்டுப் பாடுவர்.

வயிறு நிரம்பிவிட்டதா
நிறம்பவில்லை

எல்லா உப்பும் அழிக்கப்படும்வரையில் மீண்டும் மீண்டும் இந்த வினா-விடை நிகழும். அழித்து முடிந்ததும் வயிறு நிரம்பிவிட்டது என்பர்.

மீண்டும் கூடுவர். இரு அணியினரும் சேர்ந்து சென்று அழிக்கப்படாத உப்புக் குவியல்களை எண்ணிப்பார்ப்பர். யார் வைத்த உப்பில் அழிக்கப்படாத குவியல் அதிகமாக எஞ்சியுள்ளதோ அந்த அணியினர் வென்றதாகத் தீர்மானிக்கப்படும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

கருவிநூல்

தொகு
  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலாக்_குப்பல்&oldid=1012908" இலிருந்து மீள்விக்கப்பட்டது