நிலா வடமுனை

நிலா வடமுனை (lunar north pole) நிலாவின் வடக்கு அரைக்கோளத்தில் சுழற்சியின் நிலா அச்சு அதன் மேற்பரப்பை சந்திக்கும் இடமாகும்.

நிலா வடமுனைப் பகுதி நிலாப் புலனாய்வு செற்றுகலன் எடுத்த தொகுபடம்(மொசைக்.). வட முனை மையத்தில் உள்ளது.

நிலா வடமுனை நிலாவின் தென்முனைக்கு நேர் எதிர்த்திசையில் அமைந்துள்ள அதன் வடமுனை ஆகும். இதை 90 பாகை வட அகலாங்கு என வரையறுக்கலாம். நிலாவின் வட முனையில் அனைத்து திசைகளும் தெற்கு நோக்கி அமைகின்றன. அங்கு, அனைத்து நெட்டாங்குகளும் ஒன்றிணைகின்றன. எனவே, அதன் நெட்டாங்கை எந்தப் பாகை மதிப்பாகவும் வரையறுக்கலாம்.

குழிப்பள்ளங்கள்

தொகு

நிலா வட முனைப் பகுதியில் (60 வட அகலாங்குக்கும் வட முனைக்கும் இடையில் உள்ள குறிப்பிடத்தக்க குழிப்பள்ளங்கள் அவோகட்ரோ, பெல்கோவிச், பிறையன்சோன், எம்டென், காமோவ், கோல்டுச்க்கிமிடு, கெர்மைட், ஜே. எர்ழ்சல் மெட்டன், நான்சென், பாசுக்க,ல் பீட்டர்மன், பிலோலாசு, பிளாசுக்கெட்டு, பித்தகோரசு, உரோழ்தெசுட்வென்சுகி, சுவார்சுசைல்டு, சியர்சு, சோம்மர்பெல்டு, சுடெபின்சு, சில்வெசுட்டர், தேல்சு, வான்ட்டு காப், டபிள்யூ. பாண்டு, விப்பிள் ஆகியன அடங்கும்.

தேட்டம்

தொகு

ஆஸ்ட்ரோபோடிக் டெக்னாலஜி ஐஸ் பிரேக்கர் பணி என்பது 2015 ஆம் ஆண்டு பயணத்திற்கான ஒரு திட்டப்பணி ஆகும் , பின்னர் 2016 க்குத் தள்ளிப் போனது. பின்னர் நீக்கப்பட்டது. இது கூகுள் நிலாப் பரிசில் வெற்றி பெறும் ஒரு போட்டியாக கருதப்பட்டது[1][2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "TWO GOOGLE LUNAR XPRIZE TEAMS ANNOUNCE RIDESHARE PARTNERSHIP FOR MISSION TO THE MOON IN 2016". Archived from the original on 2017-11-21. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  2. "Astrobotic Adds Another Google Lunar X Prize Team to Its Lander".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலா_வடமுனை&oldid=4109213" இலிருந்து மீள்விக்கப்பட்டது