நிலிரவி எருமை
நில்ரவி எருமை (Niliravi) என்பது ஒரு எருமை இனமாகும். 1950 வரை நில், ரவி என இரு எருமை இனங்களாக வகைபடுத்தப்பட்டிருந்தது. ஆனால் அற்கு பிறகான காலகட்டத்தில் இந்த இரண்டு இனங்களையும் பிரித்தறிவதில் உண்டான குழப்பத்தால் நில்ரவி என பொதுவான பெயரில் இந்த எருமை இனம் அழைக்கப்படுகிறது. [1]
பண்புகள்
தொகுஇந்த எருமைகள் பெரும்பாலும் முர்ரா எருமையை ஒத்து இருக்கின்றன. என்றாலும் இதன் கண்களுக்கு அருகில் வெள்ளைக் கோடுகள் இதனை வேறுபடுத்துகின்றன. இவை கரிய நிறத்தினதாகவும் குறைவாக சுருண்ட குறுகிய கொம்புகள் கொண்டதாகவும், இருக்கின்றன. இதன் மடி நல்ல அமைப்புடன் உள்ளது. வயது வந்த ஆண் எருமைகள் 700 கிலோ மற்றும் பெண் எருமைகள், 600 கிலோ வரை உள்ளன. [1]
பரவல்
தொகுநீல்ரவி எருமைகள் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள மிக முதன்மையான கால்நடையாக உள்ளன. இவற்றின் எண்ணிக்கை 6.5 மில்லியன் உருப்படிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. [1]
பராமரிப்பு
தொகுநீல்ரவி எருமைகளை பாரம்பரியமாக வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டு வருகிறது. ஒரு நாளில் இருமுறை கன்றுகளுக்கு பால் கொடுத்து பின் கை கறப்பு செய்யப்படுகிறது. இவற்றிற்கு தீவனமாக பார்லி மற்றும் கோதுமை ஆகியவற்றின் வைக்கோல், மற்றும் கரும்பு மிச்சம் போன்ற பல்வேறு வகையான உணவுகள் அளிக்கப்படுகின்றன. மேய்ச்சலுக்கு அனுப்பினால் இவை நீண்ட நேரம் மேயக்கூடிய இயல்பைக் கொண்டவை.