நிலைத்த மேம்பாடு
'நிலைத்த மேம்பாடு' அல்லது 'நிலையான வளர்ச்சி' என்பது மனித தேவைகளுக்காக மூலப்பொருள் உபயோகிக்கும் பொழுது சூழ்நிலைக்கு தீங்கு விளைவிக்காமலும் மேலும் அடுத்தவரும் தலைமுறைகளுக்கு தேவையான மூலப்பொருள்களை பாதுகாப்பது ஆகும்.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் , பேண்தகைமை(SUSTAINABILITY) எனப்படுவது இயற்கை வளங்களோடு ஒத்த பொருளாதாரத்தைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது.1987 இல் 'நிலையான வளர்ச்சி' என்னும் சொல் Brundtland ஆணைய அறிக்கையில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.1992 இல் ரியோ டி ஜெனீரோ நகரத்தில் நடந்த புவி உச்சிமாநாட்டின் அறிக்கையான நிகழ்ச்சி 21, தகவல்,ஒருங்கிணைப்பு, பங்கேற்பு என்னும் மூன்று முக்கிய அம்சங்களை நிலையான வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என பிரகடனம் செய்தது. நிலையான வளர்ச்சியின் மூன்று தூண்களாக இணைப்புகள் ,தலைமுறைக்கும் தொடரும் சமத்துவம் மற்றும் சுறுசுறுப்பான இயக்கு திறன் ஆகியவை விளங்குகின்றன.