நிலை நிறுத்தும் பொருட்கள்

ஃபார்மால்டிஹைடு தொகு

சந்தையில் 38 முதல் 45% (பெரும்பாலும் 40%) நீர்த்த கரைசல்லாக ஃபார்மலின் என்ற பெயாில் கிடைக்கிறது. இதில் பார்மிக் அமிலம் (formic acid) மாசுப்பொருள்ளாகக் கலந்துள்ளது. இதனை நீக்கிவிட்டு நிலைநிறுத்தும் பொருளாகப் பயன்படுத்தலாம். பொதுவாக 4% நீர்த்த பா்ரமால்டிஹைடு கரைசல் (=10% ஃபா்ரமலின்), pH 4.0- இல் நிலைநிறுத்தப் பயன்படுத்தப்படுகிறது. தாவர உறுப்புகளின் உள்ளமைப்பினை அறிந்துகொள்ள நடைமுறையில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நிலைநிறுத்தி இதுதான்.

குளுட்டரால்டிஹைடு தொகு

சந்தையில் 25% கரைசலாகக் கிடைக்கிறது. எனினும் இதில் மாசுப்பொருளாக தெவிட்டா ஆல்டிஹைடு (unsaturated aldehyde) அளவு அதிகமாகக் காணப்படுகிறது. எனவே இவற்றை நீக்கிவிட்டு நிலைநிறுத்தும் பொருளாகப் பயன்படுத்தலாம். உறுப்பை நிலைநிறுத்த பொதுவாக 2% முதல் 3% நீர்த்த குளுடால்டிஹை கரைசலில் pH 6.0 முதல் 7.5-இல் ஒரு மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.

பொட்டாசியம் பெர்மாங்கனேட் தொகு

0.6% கரைசலாக pH 7.3-இல் வெரோனில் - அசிடேட் நடுப்பியில் (veronyl-acetate buffer) பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக எலக்ட்ரான் நுண்நோக்கிக்காக (electron microscope) நிலைநிறுத்தப் பொருள்க இது பயன்படுகிறது.

ஆஸ்மியம் டெட்ராக்சைடு (ஆஸ்மிக் அமிலம்) தொகு

0.5 முதல் 2.0% கரைசலாக pH 7.3 முதல் 7.5 வரை, வெரோனில்-அசிடேட் நடுப்பியில் பயன்படுத்தப்படுகிறது. நிலைநிறுத்தல் 0 முதல் 4'C - வெப்பநிலையில் 1 முதல் 16 மணி நேரத்திற்குச் செய்யப்பட வேண்டும். எலக்ட்ரான் நுண்நோக்கிக்காக நிலைநிறுத்த இது பயன்படுகிறது.

ஃபார்மலின்: அசிடிச் அமிலம் : ஆல்கஹால் (Formalin-Acetic-Alcohol, or FAA) தொகு

இது மிகச்சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நிலைநிறுத்திக் கலவையாகும். இதைத் தயாரிக்க : எதனால் (50%) 90 மி.லி+ கிளேசியல் அசிடிக் அமிலம் 5 மி.லி. + சந்தையில் கிடைக்கும் ஃபார்மலின் (40% ஃபார்மால்டிஹைடு) 5 மி.லி. சேர்க்கவும்.

கர்னாயின் பாய்மம் (Carnoy's fluid) தொகு

செல்லியல் ஆய்வுகளுக்கு, குறிப்பாக உட்கரு ஆய்வுகளுக்கு இது சிறந்த நிலைநிறுத்தி ஆகும். இதனைத் தயாரிக்க : அடர் எதனால் 30 மி.லி. + கிளேசியல் அசிடிக் அமிலம் 5 மி.லி. + குளோரோபார்ம் (chloroform)15 மி.லி. சேர்க்கவும்.

மேற்கோள்கள் தொகு

ஆய்வகச் சோதனை முறைகளும் கருவிகளின் செயல்பாடுகளும், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி.