நில்மோனி தாகூர்
நில்மோனி தாகூர் (Nilmoni Tagore) (1721-1791) தாகூர் குடும்பத்தின் ஒரு வாரிசான இவர், பழைய பாதுரியகட்டாவின் வீட்டை விட்டு வெளியேறி, 1758 ஆம் ஆண்டில் தாகூர் குடும்பத்தின் ஜோராசங்கோ கிளையை நிறுவினார். இவர் ஜோராசங்கோ தாகூர் பாரி என்று அழைக்கப்படுகின்றார்.[1][2] நில்மோனி மற்றும் தர்பநாராயண தாகூர் ஆகிய இருவரும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணிபுரிந்த ஜெய்ராம் தாகூரின் இரண்டு மகன்களாவர்.. தர்பநாராயணன் தனது வணிகத்தையும் நிலங்களையும் வளர்த்துக் கொண்டாலும், நில்மோனி பிரிட்டிசாருக்கு சேவை செய்யத் தீர்மானித்து மாவட்ட நீதிமன்ற சிரஸ்தாராக உயர்ந்தார்.[3] குடும்ப தகராறின் தீர்வுத் தொகையாகஇவர் தனது சகோதரர் தர்பநாராயணனிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஜோராசங்கோவுக்குச் சென்று அங்கு ஒரு வீட்டினைக் கட்டினார்.
இவருக்கு இராம்லோகன் தாகூர் (1759-1804), இராம்மோனி தாகூர் (1759-1833), இராம்புல்லாவ் தாகூர் (1767-1824) என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.[4] இராம்மோனி தாகூருக்கு இராதாநாத், துவாரகநாத் மற்றும் இராம்நாத் என்றா மூன்று மகன்கள் இருந்தனர். இராம்லோகன் தாகூருக்கு ஆண்வாரிசு இல்லை. எனவே அவர் தனது சகோதரர் இராம்மோனியின் இரண்டாவது மகனான புகழ்பெற்ற துவாரகநாத் தாகூரை தத்தெடுத்தார். அவருக்கு கீழ் தாகூரின் ஜோராசங்கோ கிளையின் அதிர்ஷ்டம் உயர்ந்தது
குறிப்புகள்
தொகு- ↑ Calcutta, 1481-1981: Marshes to Metropolis. National Council of Education. 1982. p. 171. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017.
- ↑ Clearing a Space: Reflections on India, Literature and Culture. Peter Lang. 2008. p. 75. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017.
- ↑ The Tagore Family: A Memoir. K. Paul, Trench, & Company. 1882. p. 17. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017.
- ↑ James Wyburd Furrell (1882). The Tagore Family: A Memoir. K. Paul, Trench, & Company. p. 17. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017.