நில்லுங்கள் ராஜாவே (புதினம்)

நில்லுங்கள் ராஜாவே, சுஜாதாவால் சாவி இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

‎நில்லுங்கள் ராஜாவே
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம் [1], விசா பப்ளிகேஷன்ஸ்[2]
வெளியிடப்பட்ட நாள்
2009
ISBN978-81-8493-375-8

கதைக் கரு தொகு

தான் பணிபுரியும் அலுவலகம், தன் மனைவி, குழந்தை உள்ளிட்ட எல்லாரும் தனது அடையாளங்களை மறுப்பதாகக் கூறும் ஒரு நபர் கொலை முயற்சியில் ஈடுபட்டுவிடுகிறார். நீதிமன்றத்தில் அந்த நபரின் மன நலத்தை சோதிக்கச் சொல்கிறார்கள். மனநல மருத்துவரின் வேண்டுகோளின் படி அந்த நபர் ஏன் அவர் அவ்வாறு நடக்கிறார், எதனால் யாருக்கும் அவரைத் தெரியவில்லை என்று கண்டுபிடிக்க முயல்கிறார்கள் வக்கீல் கணேஷும், வசந்தும் அதன் பின்னணியில் உள்ள சதி வலையையும் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை விவரிக்கும் கதை.

கதை மாந்தர்கள் தொகு

  • கணேஷ்
  • வசந்த்
  • காயத்ரி
  • ஜவஹர் விட்டல்
  • ராஜா
  • மருத்துவர் விஜயகுமார்
  • காவல் அதிகாரி ராஜேந்திரன்
  • மருத்துவர் பாலகோபால் மற்றும் பலர்.

மேற்கோள்கள் தொகு