இந்தியாவில் நில உரிமை கோரி நடைப்பயணம்
(நில உரிமை கோரி நடைப்பயணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியாவின் பல்வேறு நிலப்பகுதிகளில் இருந்து நிலமற்றவர்களும், ஏழைத் தொழிலாளிகளும், பழங்குடிமக்களும் தமக்கு உரித்தான உரிமையான நிலத்தையும் நீரையும் தமக்கு உறுதி செய்ய வேண்டியும், தகுந்த சீரமைப்பு நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று கோரியும் நீண்ட நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பாராளுமன்றம் அமைந்துள்ள டெல்லிக்கு அக்டோபர் 29, 2007 வந்தடைந்தனர்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் நிலமளிக்கும் இந்திய அரசு இந்தியர்களான தங்களுக்கு உரிமையான சிறு நிலம் அளிப்பதில் என்ன தடை இருக்க முடியும் என்று கேள்வியெழுப்பினர்.[1]
மேற்கோள்
தொகு- ↑ Delhi marchers calling for change - BBC - Chris Morris