நில மானிய முறைமை

வேட்டையாடி குழுக்களாக திரிந்த மனிதன், பின்னர் வேளாண்மை கற்றுக் கொண்டான். வேளாண்மையின் பலனாக ஊர், நகர கட்டமைப்புக்கள் எழுந்தன. இக்கட்டமைப்புகளின் மிகவும் பரவலான வடிவமே நிலக்கிழாரியம் (feudalism). இது நிலமானிய முறை என்றும் வழங்கப்படுகிறது. உழவுக்கு முதலான நிலத்தை உரிமைப்படுத்திக்கொண்ட நிலக் கிழார்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பைப் பெற்று கூலி வழங்கி ஒழுங்குபடுத்தியதே நிலக்கிழாரியம் (feudalism). இந்தியாவில் இது பல ஊர்களில் நடைமுறையில் இருக்கின்றது. இந்த நடைமுறை, நிலத்தின் உரிமையை குமுகாய அமைப்பின் ஊடாக தனியுடமையாக்கி மாற்றான் உழைப்பின் பயனை அனுபவிக்கும் நீதியற்ற தன்மைக்கு இட்டுச் சென்றது என்பது இன்று கண்கூடு. நிலமானிய முறை மத்திய கால ஐரோப்பாவில் பரவலாகக் காணப்பட்டது. இக் காலகட்டத்தில் அரசனைக் காட்டிலும் பிரபுக்களிடம் அதிக அதிகாரம் உருவாகியது.

நவீன நிலமானியம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நில_மானிய_முறைமை&oldid=3720789" இலிருந்து மீள்விக்கப்பட்டது