நிழற் பந்துகள்
நிழற் பந்துகள் (shade balls) நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீர் ஆவியாதலைக் குறைப்பதற்குப் பயன்படும் கருப்பு நிறத்திலான நெகிழிப் பந்து ஆகும்.
விமான நிலையத்தில் உள்ள நீர்த்திட்டுகளை நோக்கிப் பறவைகள் கவரப்பட்டு விபத்து ஏற்பட்டு விடாமல் இருப்பதற்கும் பயன்படுவதால்[1] இவற்றைப் பறவைப் பந்துகள் என்றும் அழைப்பர்.[2]
உருவாக்க முறை
தொகுஉயர்தர பாலி எத்திலீனுடன் கார்பன் அடங்கிய கருப்பு நிறம் சேர்த்து நிழற் பந்துகள் உருவாக்கப்படுகின்றன. கார்பன் சேர்ப்பதன் வழியாக வயிற்று நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.[3][4][5][6]
நான்கு அங்குல (10 செ.மீ.) அகலம் கொண்ட ஒரு நிழற் பந்தில் பகுதியளவு தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். இது காற்றால் நிழற்பந்துகள் இடம்நகர்வதைத் தடுக்கும்.[4] உயர்தர பாலி எத்திலீன் என்பது தண்ணீர்க் குழாய்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு வேதியியல் கலவையாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-17. பார்க்கப்பட்ட நாள் 2017-04-23.
- ↑ http://www.npr.org/2015/08/12/431959386/los-angeles-unleashes-shade-balls-to-protect-reservoir-water-quality
- ↑ http://www.cnbc.com/2015/08/13/shade-balls-protect-la-water-supply-during-drought.html
- ↑ 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-08. பார்க்கப்பட்ட நாள் 2017-04-23.
- ↑ http://abcnews.go.com/beta/US/los-angeles-reservoir-covered-96-million-shade-balls/story?id=33038319
- ↑ http://www.npr.org/sections/thetwo-way/2015/08/11/431670483/la-rolls-out-water-saving-shade-balls
வெளி இணைப்புகள்
தொகு- நிழற் பந்துகளின் பணி, காணொளி