நிழல் அமைச்சரவை

நிழல் அமைச்சரவை (Shadow Cabinet) என்பது பிரிட்டனிலும் ஆங்கிலப் நாடாளுமன்ற முறையைப் (வெஸ்ட்மின்ஸ்டர் முறை) பின்பற்றும் நாடுகளிலும் உள்ள ஒரு ஜனநாயக அமைப்பான இது ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு நிகராக எதிர்க்கட்சியினர் அமைக்கும் அமைச்சரவை ஆகும்.

ஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சியில் நிழல் அமைச்சர்கள் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் நடைமுறை உள்ளது. மற்றபடி நிழல் அமைச்சரவை எதிர்க்கட்சித் தலைவரால் அமைக்கப்படுகிறது.

நிழல் அமைச்சரவையினர் ஆளுங்கட்சி அமைச்சரவையை ஆக்கப் பூர்வமாய் இடித்துக் கூறுதலையும் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டுதலையும் செய்வர்.

இந்தியா ஆங்கிலேயேப் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றினாலும் நிழல் அமைச்சரவை முறை இந்தியாவில் நடைமுறையில் இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிழல்_அமைச்சரவை&oldid=3480303" இலிருந்து மீள்விக்கப்பட்டது