நீடித்த நவீன கரும்பு சாகுபடி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நீடித்த நவீன கரும்பு சாகுபடி என்பது நவீன கரும்பு சாகுபடி முறையில் விளைச்சலை அதிகப்படுத்தும் உத்திகளோடு, தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டும் முறையாகும்.
முக்கிய கோட்பாடுகள்
தொகு- ஒரு விதைபரு சீவல்களிலிருந்து (BUD CHIPS) நாற்றங்கால் அமைத்தல்
- இளம் ( 25 - 35 நாட்கள் வயதான ) நாற்றுகளை எடுத்து நடவு செய்தல்
- வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல்,
- சொட்டு நீர்ப் பாசனத்தின் வழி உரமிடுதல்,
- இயற்கை சார்ந்த உரங்கள், பயிர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல்,
- ஊடுபயிரிட்டு மண்வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க வழி செய்தல்,
நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் பயன்கள்
தொகு- தண்ணீர் உபயோகிப்பு திறன் கூடுகிறது,
- சரியான அளவு உரங்களை உபயோகிப்பதன் மூலம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு சிறப்பாக அமைகிறது,
- காற்று மற்றும் சூரிய ஒளி அதிக அளவு பயிர்களுக்கு கிடைக்கிறது. அதனால் கரும்பில் சர்க்கரை கட்டுமானம் அதிகரிக்கிறது.
- மொத்த சாகுபடி செலவு குறைகிறது.
- விவசாயிகளுக்கு ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானம் கிடைக்கிறது.
- மகசூல் அதிகரிப்பு.
உசாத்துணை
தொகு- வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்கள், நூல் - 2017 ஜூன், வேளாண்மைத் துறை, தர்மபுரி