நீடூர் என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். இது மயிலாடுதுறையில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 5017 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 2,434 ஆண்கள், 2,583 பெண்கள் ஆவார்கள். நீடூர் மக்களின் சராசரி கல்வியறிவு 80.73% ஆகும். நீடூர் மக்கள்தொகையில் 16.05% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மனிதர்கள்

தொகு

நீடூர் சி.அ. அப்துல்காதர் துனிஷ்யா வெற்றிக்காக மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள பிரபலமான மணிக்கூண்டை 1943ஆம் ஆண்டு நிறுவினார்.[1]

இடங்கள்

தொகு

இங்குள்ள "ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா" என்னும் அரபிப் பாடசாலை 1912ஆம் ஆண்டு அப்துல் கரீம் அவர்களால் நிறுவப்பட்டது.[2]

ஆதாரங்கள்

தொகு
  1. http://nidurseason.wordpress.com/?p=573
  2. http://nidurmadarsa.blogspot.in/2012/10/blog-post_14.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீடூர்&oldid=3976894" இலிருந்து மீள்விக்கப்பட்டது