நீண்ட கால கோவிட் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அலுவலகம்

அமெரிக்க நிறுவனம்

நீண்ட கால கோவிட் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அலுவலகம் (Office of Long COVID Research and Practice) என்பது அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையால் இயக்கப்படும் ஓர் அலுவலகம் ஆகும். நீண்டகால கோவிட் ஆராய்ச்சி மற்றும் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சிகளை ஒருங்கிணைக்க இவ்வலுவலகம் உருவாக்கப்பட்டது.[1][2][3] இந்த அலுவலகம் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் பிரிவின் சுகாதார உதவிச் செயலாளரின் தலைமையின் கீழ் செயல்படுகிறது. மேலும் தற்போது நீண்ட கால கோவிட் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் 14 அரசு நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை நல்கவும் உதவுகிறது.[4] அலுவலகம் நிறுவப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்தபோதும், இரண்டு முழுநேர ஊழியர்களுக்கு மட்டுமே நிதியுதவியுடன் செயல்பட்டது. பின்னர் ஒப்பந்ததாரர்களை பணியமர்த்துதலும், சுகாதார மற்றும் மனித சேவைகளின் பிற அலுவலகங்களின் பணியாளர்களை பணியமர்த்துவதும் நிகழும். [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Cohrs, Rachel (2023-07-31). "NIH begins long-delayed clinical trials for long Covid, announces new research office". STAT (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
  2. "Biden administration opens new office to study long COVID response, NIH begins clinical trials". ABC News (in ஆங்கிலம்). 2023-07-31. பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
  3. Howard, Jacqueline (2023-07-31). "Biden administration announces launch of HHS office focused on long Covid research". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
  4. Affairs (ASPA), Assistant Secretary for Public (2023-07-31). "HHS Announces the Formation of the Office of Long COVID Research and Practice and Launch of Long COVID Clinical Trials Through the RECOVER Initiative". HHS.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.