நீதம் ஆராய்ச்சி நிறுவனம்

நீதம் ஆராய்ச்சி நிறுவனம் (Needham Research Institute) [1] இங்கிலாந்தின் கேம்பிரிட்சில் உள்ள இராபின்சன் கல்லூரியின் மைதானத்தில் அமைந்துள்ளது. கிழக்கு ஆசியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தின் வரலாறு பற்றிய ஆராய்ச்சிக்கான ஒரு மையமாகும். சீனப் புத்தகத் தொடரில் அறிவியல் மற்றும் நாகரிகத்தைத் தொடங்கிய உயிர் வேதியியலாளர் மற்றும் வரலாற்றாசிரியர் இயோசப் நீதம் நினைவாக இந்த நிறுவனம் நீதம் ஆராய்ச்சி நிறுவனம் எனப் பெயரிடப்பட்டது. தற்போதைய இயக்குநர் மெய் இயான்யூன், ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள்-உலோகவியல் நிபுணர் ஆவார்.

நீதம் ஆராய்ச்சி நிறுவனம்
Needham Research Institute
A building of Chinese-inspired shape but brick construction, beyond a lawn, a sculpture, ornamental trees, and hedges.
Locationகேம்பிரிட்ச், ஐக்கிய இராச்சியம்
Coordinates52°12′18″N 0°06′06″E / 52.2050°N 0.1018°E / 52.2050; 0.1018
Address8 சில்வெசுட்டர் சாலை, கேம்பிரிட்சு சிபி3 9ஏஎப், இங்கிலாந்து
Websitehttp://www.nri.cam.ac.uk/index.html

இந்த அமைப்பு 1968 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் கிழக்கு ஆசிய அறிவியல் அறக்கட்டளையாக நிறுவப்பட்டது. 1983 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இவ்வமைப்பின் அறங்காவலர்கள் நீதம் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரை வழங்கினர்.[2] இது அயல் வாழ் இந்திய அறங்காவலர்களால் பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஆகும்.[3]

நிறுவனம் நீதமின் ஆராய்ச்சி சேகரிப்பில் இருந்து வளர்ந்தது. முதலில் கோன்வில் மற்றும் கேயசு கல்லூரியில் இருந்தது. இங்குதான் நீதம் 1976 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை தலைவராக இருந்தார். பல நகர்வுகளுக்குப் பிறகு, 1991 ஆம் ஆண்டு இராபின்சன் கல்லூரியில் தற்போதைய நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பிற்கு மாறியது. இந்த கட்டடம் சீன பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கட்டிடக் கலைஞரால் கிழக்கு ஆங்கிலேய ஆசியன் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.[4]

இயக்குநர்கள் பட்டியல்

தொகு
  1. இயோசப் நீதம் 1983-1990
  2. ஓ பெங் யோக் பிப்ரவரி 1990 [5] -2001
  3. கிறிசுடோபர் கல்லன் அக்டோபர் 2003 [6] -டிசம்பர் 2013 [7]
  4. மெய் இயான்யூன் ஜனவரி 2014- முதல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Intute: Health and Life Sciences — Full record details for Needham Research Institute". Intute (formerly the Resource Discovery Network). பார்க்கப்பட்ட நாள் 2009-06-25.
  2. "Needham Research Institute" (PDF). Needham Research Institute Newsletter. January 1987. பார்க்கப்பட்ட நாள் 2018-03-02.
  3. "Needham Research Institute". பார்க்கப்பட்ட நாள் 2018-03-02.
  4. Davies, Mansel (1995-03-27). "OBITUARY: Joseph Needham". The Independent (London). https://www.independent.co.uk/opinion/obituaryjoseph-needham-1612984.html. 
  5. "Appointments" (PDF). Needham Research Institute Newsletter. June 1990. பார்க்கப்பட்ட நாள் 2018-03-02.
  6. "New Director for the Institute" (PDF). Needham Research Institute Newsletter. October 2004. பார்க்கப்பட்ட நாள் 2018-03-02.
  7. "Professor Christopher Cullen's Retirement as Director of the Needham Research Institute" (PDF). Needham Research Institute Newsletter. August 2014. பார்க்கப்பட்ட நாள் 2018-03-02.

புற இணைப்புகள்

தொகு