நீதாமின் பை
நீதாமின் பை (Needham's sac)(விந்தணுப் பை என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தலைக்காலிகளின் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இதில் விந்தணுக்கள் சேமிக்கப்படுகின்றன. விந்தணுக்கள் கயிறுகளுடன் கூடிய விந்தணு கொண்ட சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. சில சிற்றினங்களில் விந்துதள்ளல் உறுப்பு மற்றும் சீமைக்காரை உடல் ஒன்றையும் கொண்டுள்ளது.
நீதாமின் பை மேலங்கி குழியின் இடது பக்கமாகத் திறக்கிறது. சில தலைக்காலி சிற்றினங்களின் இனச்சேர்க்கையின் போது, மாற்றியமைக்கப்பட்ட கரமான கெக்டோகோடைலசு விந்தணுவை நீதாமின் பையிலிருந்து பெண்ணின் மென்மூடிக்குழிக்குள் செலுத்துகிறது.[1] சீமைக்காரை உடல் விந்தணுவைப் பெண் இன உயிரணுடன் ஒட்டிக்கொள்ள உதவுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Barnes, Robert (1987). Invertebrate Zoology. Saunders College Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0030229073.
வெளி இணைப்புகள்
தொகு- TOLWeb இலிருந்து சிரேட் ஆண் இனப்பெருக்க பாதை