நீதா சென் (Neeta Sen) (1935 - 1 ஏப்ரல் 2006) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இந்திய பாரம்பரிய இசை இயக்குநரும் பாடகியுமாவார்.

நீதா சென்
இயற்பெயர்நீதா சென்
பிறப்புகொல்கத்தா, இந்தியா
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • பாடகர்
  • இசை இயக்குநர்
  • பாரம்பரிய இசைப் பாடக்ர்
இணைந்த செயற்பாடுகள்மன்னா தே, லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, ஷியாம் மித்ரா, ஹேமந்தா முகர்ஜி, மனபேந்திர முகர்ஜி

தொழில்

தொகு

இந்திய பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்ற இவர், கொல்கத்தாவிலுள்ள அனைத்திந்திய வானொலியுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் நவீன பெங்காலி இசையில் கவனம் செலுத்தினார். 1977ஆம் ஆண்டில், ஏ.கே. சாட்டர்ஜி இயக்கிய பிஸ்வாஜீத், சந்தியா ராய் மற்றும் சுலோச்சனா ஆகியோர் நடித்த பெங்காலித் திரைப்படமான பாபா தாரக்நாத் மூலம் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றார். கிருஷ்ண பக்த சுதாமா போன்ற பெங்காலி படங்களில் இசையமைத்தும் உள்ளார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

1927 நவம்பர் 13 ஆம் தேதி ஜகதீஷ் பர்தன், அபா பர்தான் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு சுனில் சென் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்தனர். இவரது பேத்தி ரிம்ஜிம் சென் பாலிவுட்டில் ஆடை வடிவமைப்புத் துறையில் பணி புரிகிறார்.

இறப்பு

தொகு

சிறு வயதிலிருந்தே பெருங்குடல் அழற்சியால் அவதிப்பட்டு வந்த இவர் 2006 ஏப்ரல் 1 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Krishna Bhakta Sudama | Bollywood Movies | Hindi film songs". Earthmusic.net. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.

வெளி இணைப்புகள்

தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Neeta Sen

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதா_சென்&oldid=4169214" இலிருந்து மீள்விக்கப்பட்டது