நீதித்துறை அருங்காட்சியகம், ஒரிசா உயர்நீதிமன்றம்
நீதித்துறை அருங்காட்சியகம், ஒரிசா உயர்நீதிமன்றம் (Museum of Justice, Orissa High Court) என்பது ஒடிசாவில் நீதித்துறையின் கடந்த காலத்திலிருந்து இன்று வரையிலான பயணத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் பிரித்தானிய இராச்சியம் தொடங்கி இந்தியச் சட்ட அமைப்பு பற்றிய பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த அருங்காட்சியகம் ஒடிசாவில் சட்ட அமைப்பின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது.
வரலாறு
தொகுஅருங்காட்சியகத்தைப் புதுப்பிக்கும் யோசனை ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (2023) முனைவர் எசு. முரளிதர் என்பவருடையது. ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனைவர் எசு. முரளிதர் தலைமையில், இந்த அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு, ஒடிசா ஆளுநர் பேராசிரியர் கணேசிலால் அவர்களால் மீண்டும் 2023 பிப்ரவரி 25 அன்று திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் 1500 பொருட்கள் உள்ளன.[1][2] இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையான பொருட்கள் உள்ளன. ஒடிசாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் விசாரணை மற்றும் தண்டனை தொடர்பான பல கோப்புகளும், புகைப்படங்களும் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக உள்ளன. அருங்காட்சியகத்தின் கருப்பொருள் மாடங்கள் ஒரிசா உயர் நீதிமன்றத்தின் எண்ணிம காலவரிசை மற்றும் நீதிமன்றத்தின் புகைப்படம் மற்றும் வரைகலை மாதிரி மற்றும் தொடக்கத்திலிருந்து அதன் வளர்ச்சி ஆகியவை உள்ளன.
"இது உலகின் எட்டாவது அதிசயம். இதைச் சுற்றி வரும்போது நாடு பெருமைப்படும்" எனப் பேராசிரியர் கணேஷி லால் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே தெரிவித்தார்.[3]
இந்த அருங்காட்சியகம் கட்டாக்கில் உள்ள குயிலா கோட்டையில், பாராபதி குயிலா (கோட்டை) வரலாற்று சிறப்பு வாய்ந்த வளாகத்திற்குள் அமைந்துள்ளது.[4]
கண்காட்சிகள்
தொகுஅருங்காட்சியகத்தில் உள்ள சில குறிப்பிடத்தக்கப் பொருட்கள்:
- ஒடிசாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களின் பட்டியல்
- இலட்சுமண நாயக் தண்டனை வழக்கு
- மாதிரி நீதிமன்றம்
- முன்னாள் தலைமை நீதிபதிகளின் புகைப்படங்கள்
- நீதிமன்ற ஆடைகள் மற்றும் நீதிபதிகளின் பயன்படுத்தும் தாங்கிகள்
அதிகாரப்பூர்வ இணையதளம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dutta, Jyoti Prakash (27 February 2023). "'Museum Of Justice': Some Facts About The Recently Inaugurated Judicial Museum Of Odisha". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 June 2023.
- ↑ Service, Statesman News (11 March 2023). "Museum of justice opens to public in Odisha". The Statesman. பார்க்கப்பட்ட நாள் 13 June 2023.
- ↑ "Governor Ganeshi Lal opens Museum of Justice in Cuttack". The Times of India. 26 February 2023. பார்க்கப்பட்ட நாள் 13 June 2023.
- ↑ "Museum of Justice thrown open to public in Cuttack". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 13 June 2023.