நீதி நெறி விளக்கம்

(நீதிநெறி விளக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நீதி நெறி விளக்கம் ஒரு தமிழ் நீதி நூல். குமரகுருபரர் இயற்றிய இந்நூல 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இளமை, செல்வம், யாக்கை ஆகியவற்றின் நிலையாமை, கல்வியின் சிறப்பு, துறவியர் பின்பற்ற வேண்டியன, செய்யக் கூடாதவை ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. இதில் கடவுள் வாழ்த்துப் பாடல் உட்பட 102 செய்யுள்கள் உள்ளன.மதுரையை ஆண்ட திருமலை மன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப இந்நூலைக் குமரகுருபரர் இயற்றினார். இந்நூலிலுள்ள கருத்துகள் திருக்குறள் கருத்துகளை அடியொற்றியவை.

  • மடம் கொன்று அறிவகற்றும் கல்வி.
  • நீர் மேல் குமிழி இளமை. நிறைந்த செல்வம் வந்துபோகும் அலையைப் போன்றது. நீர்மேல் எழுத்து போன்றது உடல்.
  • மலரவன் வண்தமிழ் கற்ற புலவருக்கு ஒப்பாக மாட்டான்.
  • கற்புடைய மகளிருக்குக் கணவனே தெய்வம். குழந்தைகளுக்குப் பெற்றோரே தெய்வம். மாணவனுக்கு ஆசிரியரே தெய்வம். எல்லோருக்கும் முருகனே தெய்வம்.
  • தன் கடமையைக் கண்ணனாகப் போற்றுவோர் தன் மெய்வருத்தம் பாரார் பசி நோக்க மாட்டார்.

இதுபோன்ற பல்வேறு கருத்துகளை இந்த நூல் எடுத்தியம்புகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதி_நெறி_விளக்கம்&oldid=3304392" இலிருந்து மீள்விக்கப்பட்டது