நீதிபதியின் மரணம் (நூல்)

நீதிபதியின் மரணம் லியோ டால்ஸ்டாயின் சிறுகதையின் (The Death of Ivan llyich) தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். இது ருஷ்ய இலக்கியத்தின் யதார்த்தவாதப் படைப்பான சிறுகதை ஆகும்.

நீதிபதியின் மரணம் (நூல்)
நூலாசிரியர்லியோ டால்ஸ்டாய்
மொழிபெயர்ப்பாளர்கே.ராமநாதன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைசிறுகதை
வெளியீட்டாளர்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியிடப்பட்ட நாள்
முதல் பதிப்பு நவம்பர் 2009, இரண்டாம் பதிப்பு பிப்ரவரி 2013
பக்கங்கள்iv+94=98
ISBN978-81-234-1643-4

நூல் அமைப்பு

தொகு

சமுதாயத்தில் அதிகார வர்க்கக் குடும்ப வாழ்வின் கசப்பான உண்மைகளை கூறுகிறது லியோ டால்ஸ்டாயின் ’நீதிபதியின் மரணம்’. இக்கதையின் தலைவன் ’இவான் இலியிச்’ விசாரணை நீதிபதியாக இருந்தவர். தீராநோய் அவனை வாட்டுகிறது. மரணப்படுக்கையில் வேதனைப்படும் அவன் தன் குடும்ப வாழ்க்கை பற்றி யதார்த்த நோக்குடன் நினைத்துப் பார்க்கிறான்.

அவனது சிந்தனைகள் அவன் வாழ்க்கையை உண்மையாகவே வாழ்ந்தானா என்ற கேள்வியை அவனுக்கு எழுப்புகின்றன. அவனது சிந்தனையோட்டங்களை ஆசிரியர் பதிவு செய்கிறார். தனது குழந்தைப் பருவத்திலிருந்து கடந்து சென்று இன்றைய நிலையை நெருங்க நெருங்க அவனது மகிழ்ச்சியெல்லாம் பயனற்றதாய், போலியாய் ஆகிவிட்டது என்ற அவனது ஆற்றாமையையும் "நான் மலைமீது ஏறிக்கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டே, மலையிலிருந்து கீழே உருண்டு கொண்டிருந்தேன்.ஆம் அப்படித்தான். என்னுடைய நண்பர்களும் நான் உயரச் செல்வதாகக் கருதினார்கள். ஆனால் வாழ்க்கையே என் காலடியில் நொறுங்கிக் கொண்டிருக்கிறது." என்ற அவனது வளர்ச்சி குறித்த அவனது பார்வையையும் மனநிலையையும் ஆசிரியர் நூல் முழுவதும் பதிவு செய்கிறார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிபதியின்_மரணம்_(நூல்)&oldid=2057217" இலிருந்து மீள்விக்கப்பட்டது