நீற்றுப்பெட்டி

(நீத்துப்பெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நீற்றுப்பெட்டி என்பது பிட்டு என்னும் உணவு வகையைச் சமைப்பதற்குப் பயன்படும் ஒரு பொருள் ஆகும். கூம்பு வடிவில் அமையும் இது பொதுவாகப் பனையோலையினால் இழைக்கப்படுகிறது. இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிட்டு ஒரு முக்கியமான உணவுப்பொருளாக இருப்பதாலும், அங்கே பனைகள் பெருமளவில் வளர்வதாலும் நீற்றுப்பெட்டிகள் அங்கே பெருமளவில் பயன்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் பனையோலைப் பொருட் கடையொன்றில் விற்பனைப்பு உள்ள பல வகையான நீற்றுப்பெட்டிகள்

செயற்பாடு

தொகு

குழைத்த பிட்டு மாவை இதற்குள் நிரப்பி அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் நீர் கொண்ட பானையின் வாயை மூடி இதனை வைப்பர். இதற்கென உள்ள மூடியால் இதை மூடிவிடும்போது கீழிருந்து நீற்றுப்பெட்டிக்கூடாகச் செல்லும் நீராவியில் பிட்டு மாவு அவியும். நீராவியை நீற்றுப்பெட்டி ஊடுசெல்ல விடவேண்டும் என்பதால் நீற்றுப்பெட்டியை இறுக்கமாக இழைப்பது இல்லை. இதனால், ஓலைப் பின்னல்களுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டு அதனூடாக நீராவி செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. கூடிய நீராவி ஊடுசெல்லும் வகையில் வேறு விதமாகப் பின்னப்படும் நீற்றுப்பெட்டிகளும் கிடைக்கின்றன.

தற்காலம்

தொகு

தற்காலத்திலும் நீற்றுப்பெட்டிகள் பயன்பட்டு வந்தாலும், இவற்றின் பயன்பாடு குறைந்து வருகிறது. நீற்றுப் பெட்டிகள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாக இல்லாததாலும், இத் தேவைக்காக அலுமினியம் போன்ற உலோகங்களாலான அவிகலன்கள் விற்பனைக்கு வந்துள்ளதாலும் குறிப்பாக நகரப் பகுதிகளில் வாழும் மக்கள் இத்தகையப் பொருட்களையே விரும்புகிறார்கள்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீற்றுப்பெட்டி&oldid=1914089" இலிருந்து மீள்விக்கப்பட்டது