நீராழி மண்டபம்

அனைவரும் இங்கு வந்து அருள் பெருவர்

நீராழி மண்டபம் என்பது இந்துக் கோயில்களின் திருக்குளத்தின் நடுவே அமைக்கப்படுகின்ற மண்டபமாகும். [1] இந்த மண்டபத்தின் மேல்பாகத்தில் கோயில் விமானம் அமைக்கப்படுகிறது. திருக்குளத்தின் மையத்தில் இந்த மண்டபம் அமைக்கப்படுகிறது.

குளத்தின் நடுவே அமைந்திருக்கும் நீராழி மண்டபம்

இந்த மண்டபத்தில் தெப்பத் திருவிழாவின் போது இறைவனை வைத்து பூசைகள் செய்கின்றனர்.

தெப்பத் திருவிழாவின் போது உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் வைக்கப்படுகிறது. பின்பு தெப்பத்தேரினை நீராழி மண்டபத்தினை சுற்றி வருகின்றனர். பிறகு தெப்பத்தேரினை நீராழி மண்டபத்திற்கு கொண்டு சென்று அதிலுள்ள உற்சவர் சிலையை நீராழி மண்டபத்தில் வைத்து பூசைகள் செய்வர். மீண்டும் உற்சவர் சிலையை தெப்பத்தேரில் வைத்து கோயிலுக்கு கொண்டு செல்வர்.

ஆதாரங்கள்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=5294
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராழி_மண்டபம்&oldid=3180048" இலிருந்து மீள்விக்கப்பட்டது